சிக்கல்: சிக்கல் அருகே மட்டியரேந்தல் கிராமத்தில் வேணுகோபால கிருஷ்ணன் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர் கோயிலின் வெளிக்கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்று கருவறை அருகே இருந்த உண்டியலுடன் ரூ.3000 ரொக்கப் பணத்தை திருடிவிட்டு தப்பி விட்டார். இதுகுறித்து மட்டியரேந்தலை சேர்ந்த கோயில் நிர்வாகி ராமர் அளித்த புகாரின் பேரில் சிக்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.