ஒருவரின் மகிழ்ச்சியை கெடுத்து மனநோயாளியாக மாற்றும் சக்தி ஒன்றுக்கு உள்ளது. அது என்னவென்றால் சந்தேகம் என்னும் நோய். தினமும் ஒவ்வொருவரும் ஏதாவது சந்தேகப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். உதாரணமாக வீட்டை பூட்டி விட்டோமா.. சமையல் கேஸை ஆஃப் செய்தோமா.. என்று சிந்திப்போம். இப்படி உள்ளவர்கள் நிம்மதியாகவே வாழ முடியாது. அதே சமயம் சூழ்நிலையைப் பொறுத்து சில சந்தேகங்கள் ஏற்படலாம். அதை தவறு என்று சொல்லமுடியாது. சரி இதற்கு தீர்வுதான் என்ன என்று நினைக்கிறீர்களா... நம்பிக்கை. எதை செய்தாலும் முதலில் நம்பிக்கையோடு தொடங்குங்கள். இதை நன்கு உணர்ந்தால் மகிழ்ச்சியாக வாழலாம்.