மேலூர்: திருவிளையாடல் புராணத்தில் உலகில் உள்ள ஜீவராசிகளுக்கு இறைவன் படியளந்த நாளை அஷ்டமி சப்ர விழாவாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை முன்னிட்டு சிவன் கோயிலில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக விநாயகர் மூஷிக வாகனத்திலும், முருகன் ,வள்ளி, தெய்வானை மயில் வாகனத்திலும், சோமாஸ்கந்தர் ரிஷப வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் கேடகத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இவ்விழாவிற்கான ஏற்பாட்டினை நிர்வாக அதிகாரி வாணி மகேஸ்வரி தலைமையில் சிவாச்சாரியார் தட்சிணாமூர்த்தி செய்திருந்தார்.