ராஜபாளையம்: ராஜபாளையம் சுற்று வட்டார பகுதி முருகன் கோயில்களில் ஆடி மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. மாயூரநாதர் சுவாமி கோயிலில் காலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மாலை 7:00 மணிக்கு மேல் சிறப்பு பூஜைகள் நடந்தன. சத்திரப்பட்டி புது தெரு தண்டாயுதபாணி கோயிலில் காலை அபிஷேகமும், மாலையில் விளக்கு பூஜை, இரவு 8:00 மணிக்கு தேரோட்டம் நடந்தது. சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதேபோல் ராஜபாளையம் அம்பள புலி பஜார், சுப்பிரமணிய சுவாமி கோயில், சஞ்சீவி மலை முருகன், சொக்கர் கோயில், தெற்கு வெங்காநல்லுார் சிதம்பரேஸ்வரர் கோயில், சேத்துார் திருக்கண்ணீஸ்வரர், தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய நாதர் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.