மேலுார்: கீழவளவு, அம்மன் கோவில்பட்டியில் உள்ள வீரகாளியம்மன் கோயிலில் இருந்து அம்மன் கீழவளவு, வாச்சாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களின் முக்கிய விதிகள் வழியாக தேரில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனைத் தொடர்ந்து இன்று (டிச.13) பக்தர்கள் கிராமங்களில் இருந்து பூத்தட்டு ஏந்தி ஊர்வலமாக கோயிலுக்கு வந்ததும் அம்மனுக்கு பூக்களால் அபிசேகம் செய்யப்படும். ஊர்வலத்தின் முடிவில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் வீரகாளியம்மன் எழுந்தருள்வார். அதற்கு முன்னதாக கோ பூஜையும், கோவில் முன்பு கிராமத்து சார்பில் 15 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படும். பெண்கள் அங்கப்பிரதட்சனம் செய்து நேர்த்திகடன் செலுத்துவர். இதே போல் சருகுவலையபட்டியிலும் பூத்தட்டு திருவிழா நடைபெற்றது.