தாண்டிக்குடி , தாண்டிக்குடி பெரும்பாறை காளியம்மன் கோயில் திருவிழா மூன்று நாள் நடந்தது. விழாவில் அழகாயி ஊற்றிலிருந்து வான வேடிக்கையுடன் அம்மன் அழைத்து வருதல், மாவிளக்கு, முளைப்பாரி, அக்கினி சட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல் ஆகியவை நடந்தன. தொடர்ந்து அன்னதானம் நடந்தது. ம வான வேடிக்கை மஞ்சள் நீராட்டுடன் அம்மன் பூஞ்சோலை செல்லுதல் ஆகியவை நடந்தன. ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் செய்தனர். *கொடைக்கானல் டோபிக்கானல் பெரிய காளியம்மன் கோயில் விழா நடந்தது. அம்மனுக்கு, அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டன. பக்தர்கள்அக்னிசட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல், முளைப்பாரி எடுத்தல் நடந்தன. விழாவில் பக்தர்கள் பல்வேறு சுவாமி அலங்காரங்களில் ஊர்வலமாக வந்தனர். பக்தர்கள் நேர்த்தி கடனாக எலுமிச்சை மாலை சாத்தினர். முன்னதாக அன்னதானம் நடந்தது.