Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிறுவள்ளிக்குப்பம் கோவிலில் 11ம் ... மாத்தாம்மன் கோவிலில்10ல் தீமிதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேனி வேதபுரீ தட்சிணாமூர்த்தி கோயில் கும்பாபிஷேகம்: நாளை நடக்கிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2016
02:07

தேனி, : தேனி வேதபுரீயில் சுவாமி சித்பவாநந்த ஆஸ்ரமத்தின் ஓர் அங்கமான தட்சிணாமூர்த்தி வித்யாபீடம் விளங்குகிறது. நகரின் தெற்கு பகுதியில் முல்லையாற்றின் தென்கரையில் அமைந்துள்ள இங்கு ஒன்பது அடி உயரத்திலான தட்சிணாமூர்த்தி சிலை உள்ளது. விநாயகர், சுப்பிரமணியர், சாரதம்பாள், உற்சவர், மகாலட்சுமி, நாராயணர்,சூர்ய நாராயணர், தேவகுரு, வியாழபகவான் என 9 தெய்வங்களுக்கும் தனி தனி சன்னிதி உள்ளது. நம சிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரங்களை குறிக்கும் விதமாக ஐந்து விமான கலசங்கள் அமைந்துள்ளன. மூலவரையும் விமானத்தையும் ஒருசேர தரிசிக்கலாம். பக்தர்கள் தாங்களாகவே பூஜை செய்யும் வகையில் கிழக்கு பகுதியில் காசி விஸ்வநாதருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்புகள் பெற்ற இக் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று, நாளை மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பிஷேகத்தை முன்னிட்டு 3ம்தேதி முதல் யாகசாலை பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் துவங்கின. வாஸ்து சாந்தி, முதல் காலம் பூஜைகள் துவங்கி ஏழாம் கால யாக பூஜைகள் நடைபெற்று வருகிறது. நாளை கும்பாபிஷேகத்தையொட்டி காலை 6.30 மணிக்கு எட்டாம் கால பூஜைகள் துவங்குகிறது. அதனை தொடர்ந்து மகா தீபாராதனை, யாத்ராதானம், கலசங்கள் புறப்பாடு நடைபெறுகிறது. 9.45 மணியில் இருந்து 10.45 மணிக்குள் தட்சிணாமூர்த்தி, பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் எட்டாம் நாளான இன்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் மூன்று நாள் வருடாந்திர ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீனிவாச பரிணயோத்சவ விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
திருப்பவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 128வது சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கிய ... மேலும்
 
temple news
 உத்திரமேரூர்: உத்திரமேரூர், சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவ விழாவையொட்டி, கருட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar