கொந்தகை தெய்வநாயக பெருமாள் கோயிலில் அக்.11ல் பெரிய திருவோணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29செப் 2016 12:09
மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் உப கோயிலான கொந்தகை தெய்வநாயக பெருமாள் கோயிலில் அக்.,11 பெரிய திருவோணத்தை (ஜென்ம நட்சத்திரம்) முன்னிட்டு காலை 7:00 முதல் காலை 9:00 மணிக்கு திருமஞ்சனம், காலை 10:30 முதல் காலை 11:30 மணிக்குள் தீபாராதனை, தீர்த்த கோஷ்டி பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத தெய்வநாயக பெருமாள் கருட வாகனத்தில் திருவீதி புறப்பாடு நடக்கிறது. திருமலையாழ்வார் அவதார ஸ்தலம் கொந்தகை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.