Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஓம்சக்தி காளியம்மன் கோவில் ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பந்தலுார் முருகன் கோவில் கும்பாபிஷேக விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜன
2017
01:01

பந்தலுார் : பந்தலுார் அருகே,கொளப்பள்ளி குறிஞ்சிநகர் முருகன் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பந்தலுார் அருகே, கொளப்பள்ளி குறிஞ்சிநகர் முருகன் கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா, கடந்த, 17ம் தேதி காலை, 9:00 மணிக்கு துவங்கியது. தொடர்ந்து, சாமியார் மலையில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி ஆசிரமத்தில் இருந்து, புனித நீர் எடுத்து வரப்பட்டு, பூஜை நடந்தது. பகல், 2:00 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடு, மாலை, 6:30 மணிக்கு, முதல்கால வேள்வி ஆகியவை நடந்தது. 18ம்தேதி காலை,6:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி மங்கல இசை, 9:00மணிக்கு திருமஞ்சனம், 10:00மணிக்கு இரண்டாம் கால வேள்வி, மதியம், 1:00மணிக்கு அன்னதானம், 6:00 மணிக்கு மூன்றாம் கால வேள்வி, 7:00மணிக்கு மருந்து சாற்றுதல், அன்னதான நிகழ்ச்சி நடந்தது. 19ம்தேதி காலை, 7:00 மணிக்கு காப்பு அணிவித்தல், 7:30 மணிக்கு நான்காம் கால வேள்வி, மலர் வழிபாடு நடந்தது. காலை, 9:00மணிக்கு கோவை துறவியர்கள் மெய்கண்ட அடிகளார், அரங்கசாமி அடிகள், மரகதம் அம்மையார் தலைமையில், திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடந்தது. மாலை 6:00மணிக்கு தீபாரதனை, வானவேடிக்கை, நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா சிங்காரம், கமிட்டி தலைவர் தியாகராஜ், துணை தலைவர் கந்தசாமி, செயலாளர் கோவிந்தன்,பொருளாளர் அசோக், துணை செயலாளர் ராஜேந்திரன்,அர்ச்சகர் சக்திவேல் தலைமையில், கிராம மக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பூரி: ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஜெகந்நாதர் கோயிலில், இன்று அதிகாலை நடைபெற்ற ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் நான்காவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு கோவை உக்கடம் சுண்டக்கா முத்தூர் பைபாஸ் ... மேலும்
 
temple news
திருமலை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை ... மேலும்
 
temple news
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற லால் சவுக் பகுதியில் தீபாவளி பண்டிகை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா, வரும் 15ல், கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar