வாடிப்பட்டி, வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை கோயில் திருவிழா நாளை(ஆக., 29) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று மாலை 6:00 மணிக்கு மதுரை பிஷப் அந்தோணி பாப்புசாமி தலைமையில் கொடியேற்றம், சிறப்பு திருப்பலி நடக்கிறது. செப்.,8ல் திண்டுக்கல் ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் முப்பெரும் விழா கூட்டு திருப்பலி, தேர் பவனி நடக்கிறது. செப்.,9 காலை 6:30 மணிக்கு கொடியிறக்கம், நிறைவு நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை நிர்வாகி ஜோசப்அடிகள், பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ், உதவி பங்குதந்தை யூஜின் டென்சிங் அடிகள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.