Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » சம்ப்ரதாய விரத பூஜா விதானம் » 39. கங்கா பூஜை
கங்கா பூஜை மஹிமை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 நவ
2018
18:30

காலம்: கார்த்திகை முதல்நாள் செய்வது மிக விசேஷம். சகர புத்திரர்கள் மோக்ஷமடைய வேண்டி, கங்கையை இப்பாரத பூமியில் பாயச்செய்ய சூரிய வம்சத் தோன்றலாகிய பகீரதன் கடும் தவம் புரிந்தார். மேல் உலகத்திலிருந்து கீழே வரும்போது கங்கையின் பிரவாகத்தினுடைய தாக்கத்தை குறைத்திட பரமேஸ்வரன் தனது ஜடாமுடியில் தாங்க, அதன் பிறர்பாடே இப்பூமியில் பாயத்தொடங்கிற்று. கங்கை புனிதமானவள். கங்கையில் ஸ்நானம் செய்வதாலும், பித்ரு யக்ஞங்கள் செய்வதாலும், நம் பாபங்கள் அனைத்தும் நீங்குகின்றன. ஜீவநதியாக பாரதத்தில் ஓடும் இந்த கங்கையில், அதுவும் காசியில் ஸ்நானம் செய்வது பலமடங்கு விசேஷமாகும்.

எனவே தான் ஒவ்வொரு ஹிந்துவும் தனது வாழ்நாளில் காசி யாத்திரை சென்று, கங்கா ஸ்நானம் செய்து, தமது மூதாதையர்களை உத்தேசித்து தீர்த்த ஸ்நானம், தீர்த்த ச்ரார்த்தம், கயர் ச்ரார்த்தம் ஆகியவற்றைச் செய்யவேண்டியது கட்டாயம். இதனைத் தொடர்வதற்கு தொன்றுதொட்டு சில வழிமுறைகள் நம் முன்னோர்களால் வகுக்கப்பட்டுள்ளன. அவை

1. முதலில் ராமேஸ்வரம் சென்று, அக்னி தீர்த்தத்தில் ஸங்கல்பம் செய்துகொண்டு, பிதுரு தர்ப்பணம் செய்து, ஸ்நானம் செய்யவேண்டும்.

2. இராமபிரானால் பூஜிக்கப்பட்ட பர்வதவர்த்தனி ஸமேத ராமநாதஸ்வாமி கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களில் ஸ்நானம் செய்து, ஸ்வாமியை தரிசனம் செய்து, கோடி தீர்த்தம் எடுத்துக்கொண்டு, காசி யாத்திரைக்கு புறப்படவேண்டும்.

3. காசிக்குச் சென்றதும், கங்கைக்கரையில் மணிகர்ணிகா ஸ்நானம், தீர்த்த ஸ்ரார்த்தம், பஞ்ச கங்கா பிண்டம், தம்பதி பூஜா, விச்வேச்வர அபிஷேகம், ஸ்ரீஅன்னபூரணி, விசாலாட்சி அபிஷேகம், கங்கா பூஜை, ஸ்ரீ காலபைரவ ஸமாராதனை செய்ய வேண்டும்.

4. பிறகு ஸ்ரீகயாவில் பஞ்சகயா சிரார்த்தம், பங்குனீ தீர்த்த சிரார்த்தம், விஷ்ணுபாத சிரார்த்தம், அக்ஷயவட சிரார்த்தம், அஷ்டகயா சிரார்த்தம்,  முதலியவற்றைச் செய்து, பிரயாகை, த்ரிவேணி சங்கம் ஸ்நானம் ஆகியவற்றைச் செய்தும் பிராம்மண போஜனம், தச தானம் ஆகியவற்றை செய்யவேண்டும்.

5. இவற்றை முடித்துக் கொண்டு, கங்கா தீர்த்தம் அடங்கிய தாமிர சொம்புகளை எடுத்துக்கொண்டு, ராமேஸ்வரம் சென்று, ஸ்ரீராமநாதருக்கு கங்கா ஜலத்தால் அபிஷேகம் செய்வித்தும், ப்ரார்த்தனை செய்துகொண்டு, இல்லம் திரும்ப வேண்டும்.

6. வீட்டிற்கு வந்த பிறகு, நல்ல நாளில், கங்கா ஜலம் அடங்கிய சொம்புகளை பூஜை அறையில் வைத்து, கங்கா மாதாவை முறைப்படி பூஜை செய்து, பிராம்மணர்களுகு்கு ஸமாராதனை (போஜனம்) செய்ய வேண்டும்.

அப்போதுதான் காசி யாத்திரை பலன் பூர்த்தியாகும்.

பூஜைக்கு தேவையான பொருட்கள்

1. மஞ்சள் பொடி
2. குங்குமம்
3. சந்தனம்
4. பூமாலை
5. உதிரிப்பூக்கள்
6. வெற்றிலை, பாக்கு
7. ஊதுபத்தி
8. சாம்பிராணி
9. பஞ்சு (திரிக்காக)
10. நல்லெண்ணெய்
11. கற்பூரம்
12. வெல்லம்
13. மாவிலை
14. வாழைப்பழம்
15. அரிசி
16. தேங்காய்
17. தயிர்
18. தேன்
19. தீப்பெட்டி
20. பூணூல்
21. வஸ்த்ரம்
22. அக்ஷதை (பச்சரிசியுடன் மஞ்சள் பொடி கலந்தது)
23. பஞ்சாம்ருதம் (வாழைப்பழம், பால், தேன், நெய், சர்க்கரை, கலந்தது)
24. கோலப்பொடி / அரிசி மாவு
25. பஞ்சகவ்யம்:
1. பசுவின் சிறுநீர் (கோமியம்), 2. பசுவின் சாணம், 3. பால், 4. தயிர், 5. நெய்  இவை ஐந்தும் சேர்ந்த கலவையே பஞ்ச கவ்யமாகும்.
26. திராட்சை, கல்கண்டு, சர்க்கரை கலந்த பசுவின் பால்.

குறிப்பு: ஹோமங்களுக்கு நெய் உபயோகிப்பது உத்தமம். ஒரு சில பூஜைகளில் நவதான்னியங்கள், கருகு மணிமாலை, பனைஓலை, மஞ்சள் கொத்து, ஏலக்காய் பொடி, கண் மை, அகல் விளக்கு, மூங்கில் தட்டு, பஞ்சினால் செய்த மாலை, போன்ற சில விசேஷ பொருட்கள் தேவைப்படுகின்றன. அந்தந்த பூஜையை செய்யும்போது அதற்கு தேவையானவற்றை முதலிலேயை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

மாற்றுப் பொருள்கள்

பூஜைக்கு உரிய சில பொருள்கள் கிடைக்காமலிருக்கலாம். இந்த நிலையில் ஒரு பொருளுக்குப்பதிலாக இந்தப் பொருள்தான் மாற்றுப் பொருள் என்பது விரத கல்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை.

1. தேனுக்குப் பதிலாக வெல்லம்,
2. வஸ்த்ரம், ஆபரணம், சத்ரம், சாமரம், முதலிய ராஜோபசாரங்களுக்குப் பதிலாக அக்ஷதை (அ) புஷ்பம்.

2. பூஜை அறையில் கங்கை ஜலம் அடங்கிய சொம்பினை அலங்கரித்து வைக்கவும்.

3. நைவேத்ய பொருட்கள்: சாதம், பருப்பு, பால்சாதம், லட்டு, வடை, பாயஸம், சர்க்கரைப் பொங்கல், தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு.

1. பூர்வாங்க பூஜை

1. தீப மந்திரம்

(விளக்கை ஏற்றி வைத்து, தீபத்தைப் பார்த்து, இந்த மந்திரத்தை சொல்லி புஷ்பம் போடவும்)

தீபஜ்யோதி: பரம் ப்ரஹ்ம
தீபஜ்யோதிர் ஜனார்த்தன:
தீபோ ஹரது மே பாபம்
தீபஜ்யோதிர் நமோஸஸ்து தே

2. ஆசமனம்

(நமது வலதுகை விரல்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தெய்வம் குடியிருப்பதாக ஐதீகம். இதே போல் நமது அங்கத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு தெய்வம் வசிப்பதாகக் கூறப்படுகிறது. ஆசமனம், அங்கவந்தனம் ஆகியன செய்தால், நமது உள்ளமும், உடலும் சுத்தமாகிறது என்று சாஸ்திரங்கள் கூறுவதை நாம் உணர வேண்டும். எல்லா நித்ய கர்மாக்களுக்கும், வைதிக கர்மாக்களுக்கும் ஆசமனம், அங்க வந்தனம் இன்றியமையாததாகும்.)

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து வலது உள்ளங் கையில் விட்டுக்கொண்டு கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லி சப்தமின்றி எச்சில் படாமல் மூன்று முறை உட்கொள்ளவும்.) (ஆண்கள் மற்றும் பெண்களுக்கு)

ஓம் அச்யுதாய நம:
ஓம் அனந்தாய நம:
ஓம் கோவிந்தாய நம:

அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)

(ஒவ்வொரு மந்திரத்தை சொல்லும் போது அந்தந்த மந்திரங்களுக்கு நேர் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த விரல்களால் ஸ்பரிசத்துக் கொள்ள வேண்டும்.)

1. கேச ’வ  வலக்கைக் கட்டை விரல் வலக்கன்னம்
2. நாராயண  வலக்கைக் கட்டைவிரல் இடக்கன்னம்
3. மாதவ  வலக்கை மோதிர விரல் வலக்கண்
4. கோவிந்த  வலக்கை மோதிர விரல் இடக்கண்
5. விஷ்ணு  வலக்கை ஆள்காட்டிவிரல், வலது நாசி
6. மதுஸூதன  வலக்கை ஆள்காட்டி விரல், இடது நாசி
7. த்ரிவிக்ரம்  வலக்கை சிறுவிரல், வலது காது
8. வாமன  வலக்கை சிறுவிரல் இடது காது
9. ஸ்ரீதர  வலக்கை நடுவிரல், வலதுதோள்
10. ஹ்ருஷீகேச ’ வலக்கை நடுவிரல், இடது தோள்
11. பத்மநாப  நான்கு விரல்களும் சேர்த்து, நாபி (தொப்புள்)
12. தாமோதர  ஐந்து விரல்களும் சேர்த்து, தலை

குரு த்யானம்

குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு:
குருர்தேவோ மஹேச் ’ வர:
குருஸ்ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம
தஸ்மை ஸ்ரீகுரவே நம:

4. கணபதி தியானம்

இரண்டு கைகளிலும் அக்ஷதை எடுத்துக் கொண்டு படத்தில் உள்ளதுபோல் 5 முறை குட்டிக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.

சு’க்லாம்பரதரம் விஷ்ணும்
ச ’ சி’ வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோபசா ’ந்தயே

5. ப்ராணாயாமம்

(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கையிலும், மூச்சை மெதுவாக வெளியிடும் போதும், இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாகச் சொல்லக்கூடாது. படத்தில் உள்ளது போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)

ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ:, ஓம்
மஹ:, ஓம் ஜன:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம்
தத்ஸவிதுர் வரேண்யம், பர்க்கோ
தேவஸ்ய தீமஹி, தியோ யோ ந:
ப்ரசோதயாத் ஓமாபோ ஜ்யோதீ
ரஸ:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ்
ஸுவரோம்

(மந்திரம் சொல்லி முடித்தவுடன் வலது காதை தொடவும்.)

6. ஸங்கல்பம்

(வலது கையில் அக்ஷதையை எடுத்து, கையை மூடிக்கொண்டு, இடது கையுடன் சேர்த்து வலது தொடையில் வைத்துக் கீழ்கண்ட மந்திரம் சொன்ன பிறகு, அக்ஷதையை வடக்கே போடவும்.)

மமோபாத்த ஸமஸ்த துரித, க்ஷயத்வாரா ஸ்ரீ
பரமேச்’வர ப்ரீத்யர்த்தம்,
கரிஷ்யமாணஸ்ய கர்மண:
நிர்விக்னேன பரிஸமாப்த்
யர்த்தம் ஆதௌ விக்னே
ச்’வர பூஜாம் கரிஷ்யே

7. ஆஸன பூஜை

(பூஜை ஆரம்பிக்கும் முன் நாம் அமரும் ஆசனம் / பலகையை சுத்தப்படுத்துவதற்காக, கீழ்க்காணும் மந்திரங்களை சொல்லி தீர்த்தம் தெளித்து பிறகு அமர்ந்து கொள்ளவும்.)

ப்ருத்வி த்வயா த்ருதா லோகா
தேவி த்வம் விஷ்ணுனா த்ருதா
த்வம் ச தாரய மாம் தேவி
பவித்ரம் குரு ச ஆஸனம்

8. ஆத்ம பூஜை

(மனதை ஒருநிலைப்படுத்தி இறைவனை தியானித்து கீழ்காணும் மந்திரங்களைச் சொல்லி தலையில் அக்ஷதையைப் போட்டுக்கொள்ளவும்.)

தேஹோ தேவாலய: ப்ரோக்த:
ஜீவோ தேவ: ஸநாதன:
த்யஜேத் அஜ்ஞான நிர்மால்யம்
ஸோஹம்பாவேன பூஜயேத்

விக்னேச்’வர பூஜை

மஞ்சள் பிள்ளையார் பூஜை

இப்பூஜையானது எல்லா ப்ரதான பூஜைகளுக்கும் மற்றும் எல்லா சுபகாரியங்களுக்கும் முதலில், ஆரம்பத்தில் செய்ய வேண்டிய பூஜையாகும்.

தீப மந்திரம்

(விளக்கை ஏற்றி வைத்து தீபத்தை பார்த்து இந்த மந்திரத்தை சொல்லி புஷ்பம் போடவும்)

தீபஜோதி: பரம் ப்ரஹ்ம
தீபஜ்யோதிர் ஜனார்த்தன:
தீபோ மே ஹரது பாபம்
தீபஜ்யோதிர் நமோஸ்து தே

ஆசமனம்

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு  கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லி, சப்தமின்றி எச்சில் படாமல் மூன்று முறை உட்கொள்ளவும்.) (ஆண்கள் மற்றும் பெண்களுக்கு)

ஓம் அச்யுதாய நம:
ஓம் அனந்தாய நம:
ஓம் கோவிந்தாய நம:

அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)

ஒவ்வொரு மந்திரத்தை சொல்லும் போது அந்தந்த மந்திரங்களுக்கு நேர் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த விரல்களால் ஸ்பரிசித்துக் கொள்ள வேண்டும்.

அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)

1. கேச ’வ  வலக்கைக் கட்டைவிரல் வலக்கன்னம்
2. நாராயண  வலக்கைக் கட்டைவிரல் இடக்கன்னம்
3. மாதவ  வலக்கை மோதிர விரல், வலக்கண்
4. கோவிந்த  வலக்கை மோதிரவிரல், இடக்கண்
5. விஷ்ணு  வலக்கை ஆள்காட்டிவிரல், வலது நாசி
6. மதுஸூதன  வலக்கை ஆள்காட்டி விரல், இடது நாசி
7. த்ரிவிக்ரம  வலக்கை சிறுவிரல், வலது காது
8. வாமன வலக்கை சிறுவிரல், இடது காது
9. ஸ்ரீதர  வலக்கை நடுவிரல், வலதுதோள்
10. ஹ்ருஷீகேச ’  வலக்கை நடுவிரல், இடதுதோள்
11. பத்மநாப  நான்கு விரல்களும் சேர்த்து, நாபி (தொப்புள்)
12. தாமோதர  ஐந்து விரல்களும் சேர்த்து, தலை.

தியானம்

வலது கையில் அக்ஷதை எடுத்துக் கொண்டு படத்தில் உள்ளதுபோல் 5 முறை குட்டிக்கொண்டு கீழ்க் கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.

சு’க்லாம்பரதரம் விஷ்ணும்
ச ’ சி’ வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோபசா ’ ந்தயே

ப்ராணாயாமம்

(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கி மனதிற்குள்ளும், மூச்சை மெதுவாக வெளியிடும்போதும் இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாக சொல்லக்கூடாது. படத்தில் உள்ளது போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)

ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன:,
ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸவிதுர்
வரேண்யம், பர்க்கோதேவஸ்ய
தீமஹி, தியோ யோ ந: ப்ரசோ
தயாத் ஓமாபோ ஜ்யோதீரஸ:,
அம்ருதம் ப்ரஹ்ம பூர்ப்புவஸ்ஸுவரேம்
(வலது காதை தொடவும்.)

ஸங்கல்பம்

வலது கையில் அக்ஷதையை எடுத்து, கையை மூடிக் கொண்டு, இடது கை மேல் வலது தொடையில் வைத்துக் கீழ்கண்ட மந்திரம் சொன்ன பிறகு அக்ஷதையை வடக்கே போடவும்.

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ
பரமேச்’ வர ப்ரீத்யர்த்தம், கரிஷ்யமாணஸ்ய
கர்மண: நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம்
ஆதௌ விக்னேச்’வர பூஜாம் கரிஷ்யே

குறிப்பு: மஞ்சள் பொடியை தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கூம்பு வடிவில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பிரார்த்தனை

(மஞ்சள் பிள்ளையாருக்கு கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லி ஆவாஹனம் (விக்னேஸ்வரரை வரவழைத்தல்) செய்து, புஷ்பம், அக்ஷதையை போடவும்.) வேத மந்திரங்களை ஸ்வரத்துடன் சொல்பவர்கள் மட்டுமே கீழ்கண்ட மந்திரங்களைச் சொல்லவும்.

கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹே
கவிம் கவீநாம் உபமச்’ரவஸ்தமம்
ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத
ஆந: ச்’ ருண்வந்நூதிபிஸ் ஸீத ஸாதனம்
அஸ்மின் ஹரித்ராபிம்பே
விக்னேச்’ வரம் த்யாயாமி,
விக்னேச்’வரம் ஆவாஹயாமி

(மற்றவர்கள் கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்லலாம்.)

அகஜானன பத்மார்க்கம்
கஜானனம் அகர்நிஷம்
அனேகதம்தம் பக்தானாம்
ஏகதந்தம் உபாஸ்மஹே

அஸ்மின் ஹரித்ராபிம்பே விக்னேச்’வரம்
த்யாயாமி, விக்னேச்’வரம் ஆவாஹயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு புஷ்பம், அக்ஷதை போட்டு கீழ்கண்ட மந்திரம் சொல்லி பிள்ளையாரை ஆசனத்தில் அமர்த்தியதாக பாவனை செய்ய வேண்டும்.)

விக்னேச்’வராய நம:
ஆஸனம் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாரின் திருவடிகளை அலம்புதல். உத்தரணியில் தீர்த்தம் எடுத்து பிள்ளையாரின் திருவடிக்கு நேராகக் காட்டி அர்க்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்.)

விக்னேச்’ வராய நம:
பாத்யம் ஸமர்ப்பயாமி

(கீழ்கண்ட மந்திரம் சொல்லி உத்தரணியில் தீர்த்தம் எடுத்து பிள்ளையாரின் கைகளில் அளிப்பதுபோல பாவனை செய்து தீர்த்தத்தை அர்க்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்.)

விக்னேச்’வராய நம:
அர்க்யம் ஸமர்ப்பயாமி

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து தெய்வத்தின் வாய்க்கு நேராக காட்டி அர்க்யபாத்திரத்தில் விடவும்.)

விக்னேச் ’வராய நம:
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையார் மீது தீர்த்தத்தை தெளிக்கவும்)

விக்னேச் ’ வராய நம:
ஸ்நானம் ஸமர்ப்பயாமி

(அர்க்யபாத்திரத்தில் ஜலம் விடவும்)

விக்னேச் ’வராய நம: ஸ்நாநாநந்தரம்
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு வஸ்த்ரம் அளிப்பது போல் அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்)

விக்னேச்’ வராய நம:
வஸ்த்ரார்த்தம் அக்ஷதான்
ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு பூணூலுக்கு பதிலாக அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்.)

விக்னேச் ’ வராய நம: யக்ஞோப
வீதார்த்தம் அக்ஷதான்
ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு நெற்றியில் சந்தனம் வைக்கவும்)

விக்னேச் ’ வராய நம: கந்தாம்
ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு குங்குமம் வைக்கவும்.)

விக்னேச் ’வராய நம: கந்தோபரி
குங்குமம் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு அக்ஷதையை சமர்ப்பிக்கவும்.)

விக்னேச்’வராய நம: அக்ஷதான் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு உதிரி புஷ்பங்களை சமர்ப்பிக்கவும்.)

விக்னேச்’ வராய நம:
புஷ்பை: பூஜயாமி

அர்ச்சனை

(மஞ்சள் பிள்ளையாரை பல பெயர்களில் புஷ்பங்களால் அர்ச்சனை செய்யவும்.)

ஓம் ஸுமுகாய நம:
ஓம் ஏகதந்தாய நம:
ஓம் கபிலாய நம:
ஓம் கஜகர்ணகாய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் விகடாய நம:
ஓம் விக்னராஜாய நம:
ஓம் விநாயகாய நம:
ஓம் தூமகேதவே நம:
ஓம் கணாத்யக்ஷாய நம:
ஓம் பாலசந்த்ராய நம:
ஓம் கஜானனாய நம:
ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் சூ’ர்ப்ப கர்ணாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:
ஓம் மஹாகணபதயே நம:

நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி. (அக்ஷதை, புஷ்பம், போடவும்.)

தூபதீபார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி.
(அக்ஷதை, புஷ்பம் போடவும்.)

நிவேதன மந்த்ரங்கள்

(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து வெற்றிலை, பாக்கு, பழம் முதலியவற்றை தாம்பாளத்தில் வைத்து கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.)

ஓம் பூர்புவஸ்ஸுவ:

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி தீர்த்தத்தை நைவேத்ய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

தத்ஸவிதுர்வரேண்யம்
பர்கோதேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்

(தீர்த்தத்தை நைவேத்யங்களின் மேல் தெளிக்கவும்.)

(பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லி, தீர்த்தத்தை நைவேத்திய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

(காலையில் பூஜை செய்தால்)

தேவஸவித: ப்ரஸுவ
ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி
(மாலையில் பூஜை செய்தால்)

தேவஸவித: ப்ரஸுவ
ருதம் த்வா ஸத்யேன பரிஷிஞ்சாமி
அம்ருதமஸ்து
அம்ருதோபஸ்தரணமஸி

(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

(பிறகு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி ஒவ்வொரு முறையும் ஸ்வாஹா என்று சொன்ன பிறகு படத்தில் உள்ளது போல் ஸ்வாமிக்கு அன்னம் ஊட்டுவது போல் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்.)

ஓம் ப்ராணாய ஸ்வாஹா,
ஓம் அபானாய ஸ்வாஹா,
ஓம் வ்யாநாய ஸ்வாஹா,
ஓம் உதானாய ஸ்வாஹா,
ஓம் ஸமானாய ஸ்வாஹா,
ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா,

ப்ரஹ்மணீம ஆத்மா அம்ருதத்வாய, விக்னேச்’ வராய நம: நாளீகேர கண்ட த்வயம், கதலீபலம் நிவேதயாமி.

மத்யே மத்யே பானீயம்
ஸமர்ப்பயாமி.

(தீர்த்தத்தை அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

அம்ருதாபிதாநமஸி
(ஆசமனீயம் ஸமர்ப்பயாமி)

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து இரண்டு முறை அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

பூகீபல ஸமாயுக்தம்
நாகவல்லீ தளைர்யுதம்
கர்ப்பூர சூர்ண ஸம்யுக்தம்
தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம்

விக்னேச் ’ வராய நம: தாம்பூலம் ஸமர்ப்பயாமி (வெற்றிலை பாக்கு தாம்பூலத்தில் சிறிதளவு ஜலம் விட்டு நிவேதனம் செய்யவும்.)

தீபாராதனை

விக்னேச்’வராய நம:
கற்பூர நீராஜனம் ஸந்தர்சயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு கற்பூர ஆரத்தி காட்டவும்.)

ஸமஸ்தோபசாரான் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தை ஸ்வாமியிடம் ஸமர்ப்பிக்கவும்.)

ப்ராத்தனை

வக்ரதுண்ட மஹாகாய
ஸூர்யகோடி ஸமப்ரப
அவிக்னம் குரு மே தேவ
ஸர்வகார்யேஷு ஸர்வதா
விக்னேச் ’ வராய நம: ப்ரார்த்தயாமி

(என்று புஷ்பத்தை ஸ்வாமியிடம் ஸமர்ப்பித்து நமஸ்காரம் செய்யவும்)

3. ப்ரதான பூஜை

த்யானம்

சு’க்லாம்............ சா’ந்தயே

சு’க்லாம்பரதரம் விஷ்ணும்
ச ’சி’ வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோபசா ’ந்தயே

ப்ராணாயாமம்

ஓம் பூ...... பூர்ப்புவஸ்ஸுவரோம்

ப்ராணாயாமம்

(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கி மனதிற்குள்ளும், மூச்சை மெதுவாக வெளியிடும்போதும் இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாக சொல்லக்கூடாது. படத்தில் உள்ளது போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)

ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன:,
ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸவிதுர்
வரேண்யம், பர்க்கோதேவஸ்ய
தீமஹி, தியோ யோ ந: ப்ரசோ
தயாத் ஓமாபோ ஜ்யோதீரஸ:,
அம்ருதம் ப்ரஹ்ம பூர்ப்புவஸ்ஸுவரேம்
(மந்திரம் சொல்லி முடித்தவுடன் வலது காதை தொடவும்.)

ஸங்கல்பம்

பிரதான பூஜைக்குரிய ஸங்கல்ப விளக்கம்

(நாம் எந்த ஸ்வாமியைக் குறித்து பூஜை செய்கிறோமோ மற்றும் நாம் எந்த நோக்கத்துடன் இப்பூஜையை எடுத்துக் கொள்கிறோமோ அதனை மனதில் வைத்துக் கொண்டு, இந்த ஸங்கல்பத்தின் மந்திரங்களை சொல்லி, அதன்படி செய்யவேண்டும். ஸகங்கல்பம் செய்வதனால் இப்பூஜை மூலம் நாம் உறுதிகளைக் கூறி அதை பின்பற்றி வரவேண்டும்.)

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீபரமேச்’வர ப்ரீத்யர்த்தம் சு’பே சோ’பனே முஹூர்த்தே, ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே, ஸ்ரீ ச்’ வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வன்தரே, அஷ்டாவிம்ச ’தி தமே, கலியுகமே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரத வர்ஷே, பரதக் கண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்’வே, ச ’காப்தே, அஸ்மின் வர்த்தமானே, வ்யாவ ஹாரிகே, ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே,

.... நாம ஸம்வத்ஸரே (வருஷத்தின் பெயர்)

தமிழ் வருஷங்கள் 60

1. பிரபவ
2. விபவ
3. சுக்கில
4. பிமோதூத
5. பிரஜோத்பத்தி
6. ஆங்கிரஸ
7. ஸ்ரீமுக
8. பவ
9. யுவ
10. தாது
11. ஈஸ்வர
12. வெகுதான்ய
13. பிரமாதி
14. விக்கிரம
15. விஷு
16. சித்ரபானு
17. சுபானு
18. தாரண
19. பார்த்திப
20. விய
21. சர்வஜித்து
22. சர்வதாரி
23. விரோதி
24. விக்ருதி
25. கர
26. நந்தன
27. விஜய
28. மன்மத
30. துர்முகி
31. ஏவிளம்பி
32. விளம்பி
33. விகாரி
34. சார்வரி
35. பிலவ
36  சுபகிருது
37. சோபகிருது
38. குரோதி
39. விசுவாவசு
40. பராபவ
41. பிலவங்க
42. கீலக
43. சௌமிய
44. சாதாரண
45. விரோதிகிருது
46. பரிதாபி
47. பிரமாதீச
48. ஆனந்த
49. ராக்ஷஸ
50. நள
51. பிங்கள
52. காளயுக்தி
53. சித்தார்த்தி
54. ரௌத்திரி
55. துன்மதி
56. துந்துபி
57. ருத்ரோக்காரி
58. ரக்தாக்ஷி
59. குரோதன
60. அக்ஷய

..... அயனே (உத்தராயணே   தை முதல் ஆனி வரை, தக்ஷிணாயனே  ஆடி முதல் மார்கழி வரை)

......ருதௌ

ஒரு வருஷத்துக்கு ருதுக்கள் 6

தமிழ் மாதங்கள்         ருதுக்கள்

1. சித்திரையும், வைகாசியும்  : வஸந்த ருது
2. ஆனியும், ஆடியும் : க்ரீஷ்ம ருது
3. ஆவணியும், புரட்டாசியும் : வர்ஷ ருது
4. ஐப்பசியும், கார்த்திகையும் : ச ’ரத் ருது
5. மார்கழியும், தையும் : ஹேமந்த ருது
6. மாசியும், பங்குனியும் : சி ’ சி’ர ருது

....... மாஸே

தமிழ் மாதங்களுக்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

தமிழ் மாதங்கள்         ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. சித்திரை    1. மேஷம்
2. வைகாசி    2. ரிஷபம்
3. ஆனி    3. மிதுனம்
4. ஆடி     4. கடகம்
5. ஆவணி     5. சிம்மம்
6. புரட்டாசி    6. கன்னி
7. ஐப்பசி     7. துலாம்
8. கார்த்திகை    8. விருச்’சிகம்
9. மார்கழி     9. தனுஸு
10. தை    10. மகரம்
11. மாசி     11. கும்பம்
12. பங்குனி    12. மீனம்

ஒரு மாதத்துக்கு இரண்டு பக்ஷங்கள்:

அ, சுக்ல பக்ஷம்: அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் பவுர்ணமி திதி வரையில் சுக்ல பக்ஷம்.

ஆ. க்ருஷ்ண பக்ஷம்: பவுர்ணமி திதிக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரையில் கிருஷ்ண பக்ஷம்.

திதிகள்: 15

1. பிரதமை
2. துவிதியை
3. திருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. சஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. திரயோதசி
14. சதுர்த்தசி
15. பவுர்ணமி அல்லது அமாவாசை

..........பக்ஷே (அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் பவுர்ணமி திதி வரையில் சுக்ல பக்ஷம், பவுர்ணமி திதிக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரையில் க்ருஷ்ண பக்ஷம்).

.......சு’ப்திதௌ

திதிகள் : 15

1. பிரதமை
2. துவிதியை
3. திருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. சஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. திரயோதசி
14. சதுர்த்தசி
15. பவுர்ணமி அல்லது அமாவாசை

.........வாஸர யுக்தாயாம்

தமிழ் வார நாட்கள் 7 க்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

தமிழ்நாட்கள்        ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. ஞாயிற்றுக்கிழமை    : பானுவாஸரம்
2. திங்கட்கிழமை    : இந்துவாஸரம்
3. செவ்வாய்க்கிழமை    : பௌமவாஸரம்
4. புதன்கிழமை        : ஸௌம்யவாஸரம்
5. வியாழக்கிழமை    : குருவாஸரம்
6. வெள்ளிக்கிழமை    : பிருகுவாஸரம்
7. சனிக்கிழமை        : ஸ்திரவாஸரம்

........நக்ஷத்ர யுக்தாயாம்

நக்ஷத்திரங்கள் 27 க்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

நக்ஷத்திர பெயர்கள்    ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. அஸ்வினி         அஸ்வினீ
2. பரணி        அபபரணி
3. கார்த்திகை         க்ருத்திகா
4. ரோகிணி         ரோஹிணி
5. மிருகசீர்ஷம்         ம்ருகசீர்ஷ
6. திருவாதிரை / ஆருத்ரா      ஆர்த்ரா
7. புனர்பூசம்         புனர்வஸு
8. பூசம்         புஷ்ய
9. ஆயில்யம்         ஆஸ்லேஷா
10. மகம்         மக
11. பூரம்         பூர்வ பல்குனி
12. உத்திரம்         உத்தர பல்குனி
13. அஸ்தம்         ஹஸ்த

சு’பயோக சு’பகரண ஏவங்குண விசே ’ஷண விசி ’ஷ்டாயாம் அஸ்யாம் சு’பதிதௌ,

இதுவரையில் ஸங்கல்பத்தில் பூஜைசெய்யும் தினத்தின் விஷயங்களை பார்த்தோம். இனி பூஜைசெய்யும் நபரின் விவரங்களை கூறவேண்டும்.

..... கோத்ரோத்பவஸ்ய (பூஜைசெய்யும் யஜமானனின் கோத்திரத்தின் பெயர்),... நக்ஷத்ரயுக்தாயாம் (பூஜைசெய்யும் யஜமானனின் நக்ஷத்திரம்),... ராசௌ ’ (பூஜைசெய்யும் யஜமானனின் நக்ஷத்திரத்திற் குண்டான ராசி) ஜாதஸ்ய, .... (பூஜைசெய்யும் யஜமானனின் பெயர்)

நாமதேயஸ்ய

அடுத்து என்ன பலன்களுக்காக பூஜை செய்கிறோம் என்பதைக் கூறி, எந்த ஸ்வாமியை பூஜையை செய்கிறோம் என்பதனைக்கூறி ஸங்கல்பத்தை முடிக்க வேண்டும். உதாரணம்:

* ஸத் ஸந்தான ப்ராப்த்யர்த்தம் (நற்குழந்தை பேறு உண்டாக)
* ஸகல ரோக நிவ்ருத்யர்த்தம் (எல்லா வியாதியும் தீர)
* ராஜத்வாரே ஸர்வானுகூல்ய ஸித்யர்த்தம் (அரசாங்கத்தில் எல்லா நன்மைகளையும் பெற)
* சீ’ க்ரமேவ விவாஹ ஸித்யர்த்தம் (விரைவில் திருமணமாக)
* வ்யவஹாரஜயாவாப்த்யர்த்தம் (காரிய ஜயம் ஏற்பட)
* அபம்ருத்யு தோஷ நிவாரணார்த்தம் (அகால மரணம் நீங்க)
* தனதான்ய ஸம்ருத்யர்த்தம் (தன, தான்யங்கள் விருத்தியடைய)
ஸ்ரீ............(எந்த ஸ்வாமியை பூஜை செய்கிறோமோ அந்த ஸ்வாமியின் பெயர்) பூஜாம் கரிஷ்யே.

(இது போன்ற உங்களுக்கு வேண்டிய ஸங்கல்பங்களைக் செய்துக் கொண்டு பூஜைகளை செய்யலம்.)

திதி மற்றும் நக்ஷத்திரங்களை நீங்கள் உபயோகப்படுத்தும் பஞ்சாங்கத்தைப் பார்த்துத் தெரிந்துவைத்துக்கொள்ளவும்.

மமோபாத்த, ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா, ஸ்ரீபரமேச்’வர ப்ரீத்யர்த்தம், சு’பே சோ’பனே முஹூர்த்தே, ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே, ச்’வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டா விம்ச’திதமே, கலியுகே, ப்ரதமே பாதே, ஜம்பூத்வீபே, பாரத வர்ஷே, பரதகண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்’வே, ச’காப்தே, அஸ்மின் வர்த்தமானே, வ்யாவஹாரிகே ப்ரபாவதீனாம் ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே, *...... நாம ஸம்வத்ஸரே, *...அயனே, *......ருதௌ, *.....மாஸே, *...பக்ஷே, *.....சு’பதிதௌ, *.....வாஸர யுக்தாயாம், *.......நக்ஷத்ர யுக்தாயாம், சு’பயோக சு’பகரண ஏவங்குண விசே’ஷண விசி’ஷ்டாயாம், அஸ்யாம் சு’பதிதௌ.

அஸ்மாகம் ஸஹகுடும்பானாம் க்ஷேமஸ்தைர்ய வீர்ய விஜய ஆயுராரோக்யைச்’வர் யாபிவ்ருத்யர்த்தம், தர்மார்த்த காம மோக்ஷ சதுர்வித பல புருஷார்த்த ஸித்யர்த்தம், ஸமஸ்த துரீதோப சா’ந்த்யர்த்தம், ருணத்ரய விமோசனார்த்தம் கங்கா  பாகீரதீ  ப்ரஸாதஸித்யர்த்தம் கங்காபூஜாம் கரிஷ்யே/ ததங்கம் கலச ’பூஜாம் கரிஷ்யே//

(என்று கூறி அக்ஷதையை வடக்கு பக்கமாய் போட்டு, உத்தரணி தீர்த்தத்தால் கைகளை அலம்பவும்.)

* பஞ்சாங்கம் பார்க்கவும்

விக்னேச்’வர உத்யாபனம்
(யதாஸ்தானம்)

அகஜானன பத்மார்க்கம்
கஜானனம் அகர்நிஷம்
அனேகதம்தம் பக்தானாம்
ஏகதந்தம் உபாஸ்மஹே

“விக்னேச்’வரம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி,
சோ’பனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச ”

(என்று சொல்லி மஞ்சள் பிள்ளையார் மீது அக்ஷதை போட்டு வடக்கு திசையில் நகர்த்த வேண்டும்.)

கண்டா பூஜை

(பூஜை செய்யும் இடத்தில் நற்தேவதைகளின் வரவுக்காகவும், தீயசக்திகள் விலகவும், கீழ்காணும் மந்திரங்களைச் சொல்லி, மணிக்கு சந்தனம், குங்குமம் இட்டு, மணியடிக்கவும்.

ஆகமார்த்தம் து தேவானாம்
கமநார்த்தம் து ரக்ஷஸாம்
கண்டாரவம் கரோம்யாதௌ
தேவதாஹ்வான லாஞ்ச்சனம்

10. கலச ’ பூஜை

இந்த மந்திரம் தன்னையும், தன்னை சுற்றியுள்ள பூஜா திரவியங்களையும் சுத்தம் செய்வதற்காக சொல்லப்படுவதாகும்.

பஞ்சாபத்திரத்திற்கு (தீர்த்தபாத்திரம்) நான்கு புறங்களிலும் கீழ்வரும் மந்திரத்தை சொல்லி சந்தனம் இடவும்.

கலேச திவ்ய பரிமள கந்தான் தாரயாமி

கீழ்வரும் மந்திரத்தை சொல்லி குங்குமம் இடவும் கந்தஸ்யோபரி ஹரித்ராகுங்குமம் தாரயாமி

பிறகு அந்த (தண்ணீர் நிரப்பிய) தீர்த்தபாத்திரத்தில் ஆய்ந்தெடுத்த துளஸி அல்லது புஷ்பத்தை கீழ்வரும் மந்திரத்தைக் கூறி போடவும்.

ஓம் கங்காயை நம:
ஓம் யமுனாயை நம:
ஓம் கோதாவர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஓம் நர்மதாயை நம:
ஓம் ஸிந்தவே நம:
ஓம் காவேர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஸப்தகோடி மஹாதீர்த்தானி ஆவாஹயாமி

பிறகு தீர்த்த பாத்திரத்தை வலது கையால் மூடிக் கொண்டு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லவும்.

கலச ’ ச்’ லோகம்

கலச ’ஸ்ய முகே விஷ்ணு:
கண்டே ருத்ர: ஸமாச்’ரித:
மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா
மத்யே மாத்ருகணா: ஸ்ம்ருதா:

குக்ஷௌ து ஸாகரா: ஸர்வே
ஸப்தத்வீபா வஸுந்தரா
ருக்வேதோ (அ)த யஜுர்வேத:
ஸாமவேதோ (அ) ப்யதர்வண:

அங்கைச் ’ச ஸஹிதா: ஸர்வே
கலசா ’ம்பு ஸமாச்’ரிதா:
ஆயாந்து தேவபூஜார்த்தம்
துரிதக்ஷயகாரகா:

கங்கே ச யமுனே சைவ
கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி
ஜலே (அ) ஸ்மின் ஸந்நிதம் குரு
ஓம் பூர்புவஸ்ஸுவ: (3 முறை)

என்று ஜபித்து, கலச ’த் தீர்த்தத்தை சிறிதளவு எடுத்து பூஜா திரவ்யங்களையும், ஸ்வாமியையும் ப்ரோக்ஷித்து, தன்னையும் ப்ரோக்ஷித்து கொள்ளவும்.

தியானம்

சதுர்புஜாம் த்ரினயனாம் சு’த்தஸ்படிக ஸந்நிபாம்/
த்யாயேஹம் மகராரூடாம் சு’ப்ரவஸ்த்ராம் சு’சிஸ்மிதாம்//
அஸ்மின் கலசே ’ கங்கா தேவீம் த்யாயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)

ஆவாஹனம்

விஷ்ணுபாதாப்ஜஸம்பூதே விச்’வநாதசி’ர: ஸ்திதே/
ஆவாஹயாமி கங்கே த்வாம் பக்தாபீஷ்டபலப்ரதே//
அஸ்மின் கலசே ’ கங்கா தேவீம் ஆவாஹயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)

ப்ராணப்ரதிஷ்டை

(பக்கம் 41ம் முதல் 48 வரை உள்ளபடி செய்யவும்.)

ப்ராணப்ரதிஷ்டா

ப்ராணபிரதிஷ்டை என்பது எந்த தெய்வத்தை பூஜை செய்கிறோமோ அந்த விக்ரஹம் அல்லது பிம்பத்திற்கு ப்ராணனை (உயிர்) கொடுத்து பூஜை செய்வதை ப்ராணப்பிரதிஷ்டை என்கிறோம். ப்ராணபிரதிஷ்டை செய்யும் போது முதலில் பஞ்சகவ்யத்தை சிறிதளவு விக்ரஹம் அல்லது பிம்பத்தின் மேல் தெளிக்கவும். ஸ்வாமி படத்திற்கு ப்ராணப்ரதிஷ்டை கிடையாது.

ப்ராணப்ரதிஷ்டா மந்த்ர:

............ கோட்டிட்ட இடங்களில் எந்த தெய்வத்தை பூஜை செய்கிறீர்களோ அந்த தெய்வத்தின் பெயரைச் சொல்லவும்.

ஓம் அஸ்ய ஸ்ரீ ...........
ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய

(வலதுகையை தலையின் மேல் வைத்து சொல்லவும்.)

ப்ரஹ்ம விஷ்ணு மஹேச்’வரா: ருஷய:

(வலதுகையை மூக்கின் மேல் வைத்துச் சொல்லவும்.)

ருக் யஜுஸ்ஸாம அதர்வாணி ச்சந்தாம்ஸி

(வலதுகையை நடுமார்பில் வைத்துச் சொல்லவும்.)

ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி
ஸம்ஹார காரிணீ ப்ராணச ’க்தி:
பரா தேவதா

(வலதுகையை வலதுமார்பில் வைத்து சொல்லவும்.)

ஆம் பீஜம்

(வலதுகையை இடதுமார்பில் வைத்து சொல்லவும்.)

ஹ்ரீம் ச ’க்தி

(வலதுகையை நடுமார்பில் வைத்து சொல்லவும்.)
க்ரோம் கீலகம்

(இரண்டு கையையும் சேர்த்து கும்பிடவும்.)
ஸ்ரீ.........ப்ராண ப்ரதிஷ்டார்த்தே ஜபே விநியோக:

(ஆள்காட்டி விரலால் கட்டை விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)

ஆம் அங்குஷ்ட்டாப்யாம் நம:
(கட்டைவிரலால் ஆள்காட்டி விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஹ்ரீம் தர்ஜநீப்யாம் நம:

(கட்டை விரலால் நடு விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
க்ரோம் மத்யமாப்யாம் நம:

(கட்டை விரலால் மோதிர விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஆம் அனாமிகாப்யாம் நம:

(கட்டை விரலால் சுண்டு விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஹ்ரீம் கனிஷ்டிகாப்யாம் நம:

(படத்தில் உள்ளபடி இரண்டுகைகளையும் தடவவும்.)

க்ரோம் கரதலகரப்ருஷ்ட்டாப்யாம் நம:
(ஹ்ருதயத்தில் கை வைக்கவும்.)

ஆம் ஹ்ருதயாய நம:

(தலையில் கை வைக்கவும்.)
ஹ்ரீம் சி’ரஸே ஸ்வாஹா

(குடுமியை தொட்டுச் சொல்லவும்.)
க்ரோம் சி’காயை வஷட்

(படத்தில் உள்ளதுபோல் செய்யவும்.)
ஆம் கவசாய ஹும்

(கண்களைத் தொட்டு மந்திரம் சொல்லவும்.)
ஹ்ரீம் நேத்ரத்ரயாய வௌஷட்

(இரண்டு கைகளையும் தட்டி சொல்லவும்.)
க்ரோம் அஸ்த்ராய பட்

(தலையை சுற்றிச் சொடுக்கு போட்டுக் கொண்டே சொல்லவும்.)
பூர்ப்புவஸ்ஸுவரோமிதி திக்பந்த:

தியானம்

ரக்தாம்போதிஸ்த்த போதோல்லஸ
தருண ஸரோஜாதிரூடா கராப்ஜை:
பாச ’ம் கோதண்ட மிக்ஷூத்பவ
மளிகுண மப்யங்குச ’ம் பஞ்சபாணான்
பிப்ராணாஸ்ருக் கபாலம் த்ரிநயன
லஸிதா (ஆ) பீன வக்ஷோருஹாட்யா
தேவீ பாலார்க்கவர்ணா பவது
ஸுககரீ ப்ராணச ’க்தி: பரா ந:

ஆம் ஹ்ரீம் க்ரோம் க்ரோம் ஹ்ரீம் ஆம் அம், யம், ரம், லம், வம், ச ’ம், ஷம், ஸம், ஹம் ஹம்ஸ: ஸோஸஹம், ஸோஸஹம் ஹம்ஸ:

அஸ்யாம் மூர்த்தௌ .......(ப்ரதான ஸ்வாமியின் பெயர்)
ப்ராணஸ்திஷ்டது ...........(ப்ரதான ஸ்வாமியின் பெயர்)

ஜீவஸ்திஷ்டது ஸர்வேந்த்ரியாணி வாங்மனஸ்  த்வக் சக்ஷு: ச்’ரோத்ர ஜிஹ்வா  க்ராண வாங்  பாணி  பாத  பாயூபஸ்தானி இஹாகத்ய ஸ்வஸ்தி ஸுகம் சிரம் திஷ்டந்து ஸ்வாஹா ஸான்னித்யம் குரு ஸ்வாஹா

(அக்ஷதை, புஷ்பம், ஜலம் இவை மூன்றையும் பிம்பத்தின் மீது போடவும்.)

அஸுனீதே புனரஸ்மாஸு சக்ஷு:
புன: ப்ராணமிஹ நோ தேஹிபோகம்
ஜ்யோக் பச்’யேம ஸூர்ய முச்சரந்த
மனுமதே ம்ருளயா ந: ஸ்வஸ்தி

பஞ்சதச ’ ஸம்ஸ்காரார்த்தம் பஞ்சதச ’ வாரம் ப்ரணவஜபம் (ஓம் 15 முறை சொல்லவும்) க்ருத்வா ப்ராணான் ப்ரதிஷ்டாபயாமி

(மந்திரம் சொன்ன பிறகு பால், தேன், நெய் கலந்து ஒரே பாத்திரத்தில் ப்ராண சக்திக்கு நிவேதனம் செய்யவும்.)

ஆவாஹிதோ பவ

ஸ்தாபிதோ பவ

ஸன்னிஹிதோ பவ

ஸன்னிருத்தோ பவ

அவகுண்டிதோ பவ

ஸுப்ரீதோ பவ

ஸுப்ரஸன்னோ பவ

ஸுமுகோ பவ

வரதோ பவ

ப்ரஸீத ப்ரஸீத

(கையினால் பிம்பத்தைத் தொட்டுச் சொல்லவும்.)

(ஒரு தெய்வமாக இருந்தால்)

ஸ்வாமியின் ஸர்வஜகன்நாத
யாவத் பூஜாவஸானகம்
தாவத் த்வம் ப்ரீதி பாவேன
பிம்பே (அ)ஸ்மின் ஸன்னிதிம் குரு

சித்ரபடே (படமாகயிருந்தால்), கலசே ’ (கலசமாகயிருந்தால்) கும்பேஸ்மின் (கும்பத்திற்கு), ப்ரதிமாயாம் (யந்திரத்திற்கு)

(பல தெய்வமாக இருந்தால்)

ஸ்வாமின: ஸர்வஜகன்நாதா:
யாவத் பூஜாவஸானகம்
தாவத் யூயம் ப்ரீதிபாவேன
பிம்பே(அ)ஸ்மின் ஸன்னிதிம் குரு

பெண்தேவதையாக இருந்தால் கீழ்கண்டவாறு சொல்லவும்.

தேவி ஸர்வ ஜகன்மாதே

பிறகு அந்தந்த பிரதான பூஜையைத் தொடரவும்.

ஸமஸ்த உபசார பூஜைகள்

முக்தாரத்ன  ஸுவர்ணாதி  கசிதம் ஸுந்தரம் சு’பம்/
ஸிம்ஹாஸனம் ப்ரதாஸ்யாமி க்ருஹாண மகராஸனே//
கங்கா தேவ்யை நம: ஆஸனம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)

ஸிந்த்வாதிஸரிதுத்பூதம் கந்தபுஷ்பஸமன்விதம்/
பாத்யம் ததாம்யஹம் தேவி ப்ரஸீத பரமேச்’வரி//
கங்கா தேவ்யை நம: பாத்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

ப்ரஹ்மகமண்டலு ஸம்பூதே கங்கே த்ரிபதகாமிநி/
க்ருஹாணார்க்யம் ப்ரதாஸ்யாமி
ஜஹனுகந்யே நமோஸ்து தே//
கங்கா தேவ்யை நம: அர்க்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

ஸுவர்ணகலசா’நீதம் நாநாகந்தஸுவாஸிதம்/
ஆசம்யதாம் மயா தத்தம் க்ருஹாணாம்ருதவர்ஷிணி//
கங்கா தேவ்யை நம: ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

பயோததிக்ருதம் க்ஷௌத்ரம் ரம்பாபலஸமந்விதம்/
பஞ்சாம்ருதமிதம் தேவி ஸ்வீகுருஷ்வ மஹேச்’வரி//
கங்கா தேவ்யை நம: பஞ்சாம்ருத ஸ்நானம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் பஞ்சாமிருதம் தெளிக்கவும்)

நர்மதா யமுனா ஸிந்து கோதாவர்யாஹ்ருதைர்ஜலை:/
ஸ்நாபயாமி சி’வே பக்த்யா பாகீரதி நமோஸ்து தே//
கங்கா தேவ்யை நம:
சு’த்தோதக ஸ்நானம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் தீர்த்தம் தெளிக்கவும்)

ஸ்நானானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

வைடூர்யபத்மராகாதி கசிதம் மேகலாந்விதம்/
ஸுவர்ணஸூத்ர ஸம்யுக்தம் க்ஷௌமம்
தாஸ்யாமி க்ருஹ்யதாம்//
கங்கா தேவ்யை நம: வஸ்த்ரார்த்தம்
அக்ஷதான் ஸமர்ப்பயாமி (அக்ஷதை போடவும்)

மலயாசல ஸம்பூதம் கஸ்தூரீ குங்குமாந்விதம்/
கர்ப்பூரமிச்’ரிதம் கந்தம் க்ருஹாண பரமேச்’வரி//
கங்கா தேவ்யை நம: கந்தான் தாரயாமி
(சந்தனமிடவும்)

கந்தோபரி ஹரித்ரா குங்குமம் தாரயாமி
(குங்குமமிடவும்)

அக்ஷதான் சா’லிஸம்பூதான் ஹரித்ரா குங்குமாந்விதம்/
பூஜார்த்தம் ஸம்க்ருஹாணேமான் அக்ஷய்யபலதாயினி//
கங்கா தேவ்யை நம: அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்)

வஜ்ரவைடூர்ய மாணிக்யம் பத்மராகாதி நிர்மிதம்/
கங்கணம் கரசோ’பார்த்தம் காமிதார்த்தபலப்ரதே//
கங்கா தேவ்யை நம: ஆபரணார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்)

கேதகீ துளஸீபில்வ  மல்லிகா  கமலாதிபி:/
புன்னாகைரர்சயாமி த்வாம் க்ருஹாணாமரவந்திதே//
கங்கா தேவ்யை நம: புஷ்பாணி ஸமர்ப்பயாமி
(புஷ்பம் போடவும்)

அங்க பூஜை

(ஒவ்வொரு நாமாவைச் சொல்லி புஷ்பத்தால் அர்ச்சிக்கவும்.)

பாபபர்வதநாசி’ன்யை    நம: பாதௌ        பூஜயாமி (கால்கள்)
பக்தவத்ஸலாயை        நம: குல்பௌ        பூஜயாமி (கணுக்கால்)
ஜகத்தாத்ர்யை        நம: ஜங்கே         பூஜயாமி (முழங்கால்)
ஜாஹ்நவ்யை        நம: ஜானுனீ        பூஜயாமி (முட்டி)
சை’லஸுதாயை        நம: ஊரூ        பூஜயாமி (தொடை)
ஸமுத்ரகாமின்யை    நம: கடிம்        பூஜயாமி (இடுப்பு)
மகராரூடாயை        நம: குஹ்யம்        பூஜயாமி (ஸ்தனம்)
ஆனந்தவர்த்தின்யை    நம: ஜகனம்         பூஜயாமி (அடிவயிறு)
கங்காயை        நம: நாபிம்        பூஜயாமி (தொப்புள்)
ஜகத்குக்ஷ்யை        நம: உதரம்        பூஜயாமி (வயிறு)
விசா’லவக்ஷஸே        நம: வக்ஷஸ்தலம்        பூஜயாமி (மார்பு)
ஹ்லாதின்யை        நம: ஹ்ருதயம்        பூஜயாமி (இதயம்)
ஸுஸ்தன்யை        நம: ஸ்தனௌ        பூஜயாமி (மார்பகம்)
தரங்கிண்யை        நம: பார்ச்’வௌ        பூஜயாமி (இடுப்பு)
உன்னதகண்ட்யை    நம: கண்டம்        பூஜயாமி (கழுத்து)
த்ரைலோக்யஸுந்தர்யை    நம: ஸ்கந்தௌ        பூஜயாமி (தோள்கள்)
அம்ருதகலச’ஹஸ்தாயை    நம: ஹஸ்தான்        பூஜயாமி (கைகள்)
லீலாசு’கதாரிண்யை    நம: பாஹூன்        பூஜயாமி (புஜதண்டம்)
வித்யாப்ரகாசி’ன்யை    நம: முகம்        பூஜயாமி (முகம்)
த்ரைலோக்யவாஸின்யை    நம: லலடம்        பூஜயாமி (நெற்றி)
ஸுநாஸிகாயை        நம: நாஸிகாம்        பூஜயாமி (மூக்கு)
மகரகுண்டலதாரிண்யை    நம: ச்’ரோத்ரே        பூஜயாமி (காதுகள்)
பிம்போஷ்ட்யை        நம: ஓஷ்டௌ        பூஜயாமி (உதடுகள்)
அநாதரக்ஷிண்யை    நம: அதரம்        பூஜயாமி (வாக்கு)
சஞ்சலகத்யை        நம: ஜிஹ்வாம்        பூஜயாமி (நாக்கு)
அளகநந்தாயை        நம: கண்டஸ்தலம்    பூஜயாமி (தொண்டை)
திலகதாரிண்யை        நம: பாலம்        பூஜயாமி (நெற்றி)
ஜ்ஞானரூபிண்யை    நம: சுபுகம்        பூஜயாமி (முகவாய்க்கட்டை)
அம்ருதபிம்பாயை    நம: அலகான்        பூஜயாமி (திலகம்)
பீமஸ்த்யை        நம: சி’ர        பூஜயாமி (தலை)
பாகீரத்யை        நம: ஸர்வாண்யங்கானி    பூஜயாமி (முழுவதும்)

கங்கா அஷ்டோத்தரச’த நாமாவளி:

ஓம் கங்காயை            நம:
ஓம் விஷ்ணுபாதாப்ஜ ஸம்பூதாயை        நம:
ஓம் ஹரவல்லபாயை        நம:
ஓம் ஹிமாசலேந்த்ர தனயாயை        நம:
ஓம் கிரிமண்டலகாமின்யை        நம:
ஓம் தாரகாராதிஜனந்யை        நம:
ஓம் ஸகராத்ம ஜதாரிகாயை        நம:
ஓம் ஸரஸ்வதீஸமாயுக்தாயை        நம:
ஓம் ஸுகோஷாயை        நம:
ஓம் ஸிந்துகாமிந்யை    (10)    நம:
ஓம் பாகீரத்யை            நம:
ஓம் பாக்யவத்யை        நம:
ஓம் பாகீரத ரதானுகாயை        நம:
ஓம் த்ரிவிக்ரம பதோத்பூதாயை        நம:
ஓம் த்ரிலோகபதகாமிந்யை        நம:
ஓம் க்ஷீரசு’ப்ராயை        நம:
ஓம் பஹுக்ஷீராயை        நம:
ஓம் ஸ்ரீவ்ருக்ஷஸமாகுலாயை        நம:
ஓம் த்ரிலோசன ஜடாவாஸிந்யை        நம:
ஓம் ருணத்ரய விமோசிந்யை (20)        நம:
ஓம் த்ரிபுராரி சி’ரச்’சூடாயை        நம:
ஓம் ஜாஹ்நவ்யை            நம:
ஓம் நதபீதிஹ்ருதே        நம:
ஓம் அவ்யயாயை        நம:
ஓம் நயனானந்ததாயிந்யை        நம:
ஓம் நகபுத்ரிகாயை        நம:
ஓம் நிரஞ்ஜனாயை        நம:
ஓம் நித்யசு’த்தாயை        நம:
ஓம் நீரஜாதிபரிஷ்க்ருதாயை        நம:
ஓம் ஸாவித்ர்யை     (30)        நம:
ஓம் ஸலிலவாஸாயை        நம:
ஓம் ஸாகாராம்பு ஸமேதிந்யை        நம:
ஓம் ரம்யாயை            நம:
ஓம் பிந்துஸரேஸ            நம:
ஓம் அவ்யக்தாயை        நம:
ஓம் வ்ருந்தாரக ஸமாச்’ரிதாயை        நம:
ஓம் உமாஸபத்ந்யை        நம:
ஓம் சு’ப்ராங்காயை        நம:
ஓம் ஸ்ரீமத்யை            நம:
ஓம் தவலாம்பராயை (40)        நம:
ஓம் ஆகண்டல வனவாஸாயை        நம:
ஓம் கண்டேந்து க்ருதசே ’கராயை        நம:
ஓம் அம்ருதாகார ஸலிலாயை        நம:
ஓம் லீலாலங்கித பர்வதாயை        நம:
ஓம் விரிஞ்சிகலசா’ வாஸாயை        நம:
ஓம் த்ரிவேண்யை        நம:
ஓம் த்ரிகுணாத்மிகாயை        நம:
ஓம் ஸங்கதாகௌக ச’மந்யை        நம:
ஓம் ச’ங்கதுந்துபி நிஸ்வநாயை        நம:
ஓம் பீதிஹர்த்ரே (50)        நம:
ஓம் பாக்யஜனந்யை        நம:
ஓம் பின்னப்ரஹ்மாண்ட தர்ப்பிண்யை    நம:
ஓம் நந்தின்யை            நம:
ஓம் சீ’க்ரகாயை            நம:
ஓம் ஸித்தாயை            நம:
ஓம் ச’ரண்யாயை            நம:
ஓம் ச’சி’சே’கராயை        நம:
ஓம் சா’ங்கர்யை            நம:
ஓம் ச ’பரீபூரண்õயை        நம:
ஓம் பர்கமர்க்னி க்ருதாலயாயை (60)    நம:
ஓம் பவப்ரியாயை        நம:
ஓம் ஸத்யஸந்தப்ரியாயை        நம:
ஓம் ஹம்ஸஸ்வரூபிண்யை        நம:
ஓம் பகீரதாம்ருதாயை        நம:
ஓம் அனந்தாயை            நம:
ஓம் ச’ரச்சந்த்ர நிபானனாயை        நம:
ஓம் ஓம்கார ரூபிண்யை        நம:
ஓம் அதுலாயை            நம:
ஓம் க்ரீடாகல்லோல காரிண்யை        நம:
ஓம் ஸ்வர்கஸோபான ஸரண்யை (70)    நம:
ஓம் ஸர்வதேவ ஸ்வரூபிண்யை        நம:
ஓம் அம்ப: ப்ரதாயை        நம:
ஓம் துக்கஹந்த்ர்யை        நம:
ஓம் சா’ந்திஸந்தான காரிண்யை        நம:
ஓம் தாரித்ர்யஹந்த்ர்யை        நம:
ஓம் சி’வதாயை            நம:
ஓம் ஸம்ஸாரவிஷநாசி’ந்யை        நம:
ஓம் ப்ரயாகநிலயாயை        நம:
ஓம் ஸீதாயை            நம:
ஓம் தாபத்ரயவிமோசிந்யை        நம:
ஓம் ச’ரணாகத தீநார்த்த பரித்ராணாயை (81)    நம:
ஓம் ஸுமுக்திதாயை        நம:
ஓம் ஸித்தியோக நிஷேவிதாயை        நம:
ஓம் பாபஹந்த்ர்யை        நம:
ஓம் பாவநாங்காயை        நம:
ஓம் பரப்ரஹ்ம ஸ்வரூபிண்யை        நம:
ஓம் பூர்ணாயை            நம:
ஓம் புராதனாயை            நம:
ஓம் புண்யாயை            நம:
ஓம் புண்யதாயை (90)        நம:
ஓம் புண்யவாஹின்யை        நம:
ஓம் புலோமஜார்ச்சிதாயை        நம:
ஓம் பூதாயை            நம:
ஓம் பூதத்ரிபுவனாயை        நம:
ஓம் ஜயாயை            நம:
ஓம் ஜங்கமாயை            நம:
ஒம் ஜங்கமாதாராயை        நம:
ஓம் ஜலரூபாயை            நம:
ஓம் ஜகத்திதாயை            நம:
ஓம் ஜஹனுபுத்ர்யை (100)        நம:
ஓம் ஜகன்மாத்ரே             நம:
ஓம் ஜம்பூத்வீப விஹாரிண்யை        நம:
ஓம் பவபத்யை            நம:
ஓம் பீஷ்மமாத்ரே            நம:
ஓம் ஸித்தாயை            நம:
ஓம் ரம்யருபத்ருதாயை        நம:
ஓம் உமாகரகமல மஞ்ஜாதாயை        நம:
ஓம் அஜ்ஞான திமிரபானவே (108)        நம:
ஸ்ரீகங்கா தேவ்யை        நம:
நானாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி.

உத்தராங்க பூஜை

சந்தனாகருமுஸ்தாதி க்ருதகுக்குலு ஸம்யுதம்/
தசா’ங்கத்ரவ்ய ஸம்யுக்தம் தூபோயம் ப்ரதிக்ருஹ்யதாம்//
கங்கா தேவ்யை நம: தூபம் ஆக்ராபயாமி
(தூபம் காட்டவும்)

ஸாஜ்யம் த்ரிவர்த்தி ஸம்யுக்தம் வஹ்னிநா யோஜிதம் மயா/
க்ருஹாண மங்களம் தீபம் த்ரைலோக்ய திமிராபஹம்//
கங்கா தேவ்யை நம: தீபம் தர்ச’யாமி
(தீபம் காட்டவும்)

நைவேத்ய மந்திரங்கள்

(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து நைவேத்தியங்களை வைக்கவும்.)

ஓம் பூர்புவஸ்ஸுவ:

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து மந்திரம் சொல்லி தீர்த்தத்தை நைவேத்ய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி/
தியோ யோ ந: ப்ரசோதயாத்//
(தீர்த்தத்தை நைவேத்தியங்களின் மேல் தெளிக்கவும்.)

தேவஸவித: ப்ரஸுவ/
ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி/
(காலையில் பூஜை செய்தால்)

தேவஸவித: ப்ரஸுவ/
ருதம் த்வா ஸத்யேன பரிஷிஞ்சாமி/
(மாலையில் பூஜை செய்தால்)

தீர்த்தத்தை நைவேத்திய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.

அம்ருதமஸ்து/ அம்ருதோபஸ்தரணமஸி//
(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

(பிறகு பின்வரும் மந்திரத்தை சொல்லி ஒவ்வொரு முறையும் ‘ஸ்வாஹா’ என்று சொன்ன பிறகு படத்தில் உள்ளது போல் ஸ்வாமியின் பக்கம் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்.)

ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபானாய ஸ்வாஹா,
ஓம் வ்யானாய ஸ்வாஹா, ஓம் உதானாய ஸ்வாஹா,
ஓம் ஸமானாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா,

சா’ல்யன்னம் வ்யஞ்ஜநைர்யுக்தம் ஸூபோபூபக்ருதாந்விதம்/
க்ஷீரான்னம் லட்டுகோபேதம் புஜ்யதாமம்ருதாசி’னி//
கங்கா தேவ்யை நம: மஹாநைவேத்யம் நிவேதயாமி
(நைவேத்தியம் செய்யவும்)

மத்யே மத்யே பானீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

அம்ருதாபிதாநமஸி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

நைவேத்யானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி,
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

பூகீபல ஸமாயுக்தம் நாகவல்லீதளைர்யுதம்/
கர்ப்பூரசூர்ண ஸம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம்//
கங்கா தேவ்யை நம: தாம்பூலம் ஸமர்ப்பயாமி
(தாம்பூலத்தில் தீர்த்தம் விடவும்)

தேஜ: புஞ்ஜஸ்வரூபே தே தேஜஸா பாஸிதம் ஜகத்/
நீராஜயாமி கங்கே த்வாம் பக்தாபீஷ்ட பலப்ரதே//
கங்கா தேவ்யை நம: நீராஜனம் ஸந்தர்ச’யாமி
(கற்பூரம் காட்டவும்)

கங்கே த்ரிபதகே திவ்யே ஜாஹ்னவி த்ரிதிவஸ்திதே/
ப்ரதக்ஷிணம் கரோமி த்வாம் ப்ரணதாகௌக நாசி’னி//
கங்கா தேவ்யை நம: ப்ரதக்ஷிணம் ஸமர்ப்பயாமி
(ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்காõரம் செய்யவும்.)

பிரார்த்தனை

ப்ராலேயாசலஸம்பூதே ப்ராசீநாப்தி ஸமாகமே/
ப்ராணினாம் பவரோகக்னி பூஜாம் ஸம்பூர்ணதாம் குரு//

புத்ர பௌத்ரதராதாந்ய பசு’புண்யபலோதயம்/
தேஹி மே தேவி பக்தி தே த்வத்பாதகமலே ஸதா//
(என்று பிரார்த்தனை செய்யவும்)

அர்க்யம்

(அர்க்யம் என்பது ஸ்வாமிக்கு மரியாதை மற்றும் திருப்தி படுத்தும் செயலாகும்)

அத்ய பூர்வோக்த ஏவங்குண விசே’ஷண விசி’ஷ்டாயாம், அஸ்யாம் சு’பதிதௌ. கங்கா  பாகீரதீ  ப்ரீத்யர்த்தம் கங்காபாகீரதீ பூஜாந்தே க்ஷீரார்க்ய ப்ரதானம் கரிஷ்யே//

(வலது கையில் புஷ்பம், அக்ஷதை எடுத்துக்கொண்டு, இடது கையில் பால் வைத்துக்கொண்டு ஒவ்வொரு மந்திரம் முடிந்ததும் 3 முறை அர்க்யம் விடவும்.

ப்ரஹ்மகண்டலு ஸம்பூதே கங்கே த்ரிபதகாமினி/
த்ரைலோக்யவந்திதே தேவி க்ருஹாணார்க்யம் நமோஸ்து தே//
கங்காயை நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்

தபனஸ்ய ஸுதே தேவி யமஜ்யேஷ்டே யச’ஸ்வினி/
சு’த்தானாம் சு’த்திதே தேவி க்ருஹாணார்க்யம் நமோஸ்து தே//
யமுனாயை நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்

விரிஞ்சிதனயே தேவி ப்ரஹ்ம ரந்த்ர நிவாஸினி/
ஸரஸ்வதி ஜகந்மாத: க்ருஹாணார்க்யம் நமோஸ்து தே//
ஸரஸ்வத்யை நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்

கங்காயமுனயோர்மத்யே யத்ர குப்தா ஸரஸ்வதீ/
த்ரைலோக்ய வந்திதே தேவி த்ரிவேண்யர்க்யம் நமோஸ்து தே//
த்ரிவேண்யை நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்

ஏகார்ணவேமஹாகல்பே ஸுஷுப்தே மாதவப்ரபோ/
பர்யங்கவடராஜ த்வம் க்ருஹாணார்க்யம் நமோஸ்து தே//
வடராஜாய நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்

வேணீமாதவ ஸர்வஜ்ஞ பக்தேப்ஸித பலப்ரத/
ஸபலாம் குரு மே யாத்ராம் வேணீமாதவ தே நம://
தீர்த்தராஜாய நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்

த்ரிவேணீ த்ர்யம்பகே தேவி த்ரிவிதாகவினாசி’னி/
த்ரிமார்கே த்ரிகுணே த்ராஹி த்ரிவேணீ ச’ரணாகதம்//

வாயன / உபாயன தானம்

சாஸ்திரிகள் அல்லது வீட்டில் உள்ள பெரியவருக்கு கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லி தானம் கொடுத்து அவர்கள் ஆசீர்வாதத்தைப் பெற வேண்டும்.

கங்கா பாகீரதீ ஸ்வரூபஸ்ய ப்ராஹ்மணஸ்ய இதமாஸனம்/
(ஆஸனத்தில் அமர்த்தவும்.) இமே கந்தா:/ (சந்தனம் கொடுக்கவும்)
ஸகலாராதனை: ஸ்வர்ச்சிதம் // (அவர்கள் தலையில் அக்ஷதை சேர்க்கவும்.)

(பிறகு அவருக்கு வெற்றிலை பாக்கு, பழங்கள் வைத்து தக்ஷிணையுடன் கீழ்காணும் மந்திரங்கள் சொல்லி, தானமாக கொடுத்து நமஸ்காரம் செய்யவும்.)

ஹிரண்யகர்ப கர்பஸ்தம் ஹேமபீஜம் விபாவஸோ:/
அனந்த புண்ய பலதம் அத: சா’ந்திம் ப்ரயச்ச மே//

இந்திரா ப்ரதிக்ருஹ்ணாதி இந்திரா வை ததாதி ச /
இந்திரா தாரகா த்வாப்யாம் இந்திராயை நமோ நம://

இதம் உபாயனம் ஸதக்ஷிணாகம், ஸதாம் பூலம், கங்கா பாகீரதீ பூஜா பல ஸாத்குண்யம் தீர்க்க ஸௌமாங்கல்யா வாப்திம், ஸத்புத்ர பௌத்ராபி வ்ருத்திம் கங்கா பாகீரதீ ப்ரீதிம் ச காமயமாநா துப்யம் அஹம் ஸம்ப்ரததே ந மம//

பிறகு ஹாரத்தி எடுத்து ப்ராஹ்மணர்களுக்கு, சுமங்கலிகளுக்கு சாப்பாடு போட்டு தாம்பூலம், கொடுக்கவும். மறுநாள் புனர்பூஜை செய்து கலசத்தை எடுத்து வைக்கவும்.

புனர் பூஜை/ யதாஸ்த்தானம்

மறுநாள் காலை அஷ்டோத்திரம் ஜபித்து, தன்னால் இயன்றதை நிவேதனம் செய்து, தூப, தீபம் கற்பூரம், காட்டி, “ஸ்ரீகங்கா தேவீம் யதாஸ்த்தானம் ப்ரதிஷ்டாபயாமி/ சோ’பனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச ” // என்று கூறி, வடக்கு முகமாக கங்கா தேவியை நகர்த்தி வைக்கவும். பிறகு மாலையில் விளக்கேற்றி வைத்தபின் ஸுமங்கலிகளுக்குச் சந்தனம் தாம்பூலம் கொடுக்கவும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar