Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்புல்லாணியில் கும்பாபிஷேகம் காளஹஸ்தி கோவில் காணிக்கை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வில்லியனுார் மாதா ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஏப்
2019
12:04

 வில்லியனுார்:வில்லியனுார் துாய லுார்து அன்னை ஆலய ஆண்டு பெருவிழா நேற்றுகொடியேற்றத்துடன் துவங்கியது.


வில்லியனுார் லுார்து அன்னை ஆலய 142வது ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டுநேற்றுகாலை 5:30 மணியளவில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து கொடியேற்றத்துடன் ஆண்டு பெருவிழா துவங்கியது.காலை 7:00 மணிக்கு உதகை மறைமாவட்ட ஆயர்  அமல்ராஜ் தலைமையில் திருப்பலியும், ரெயின்போ நகர் பங்கு தந்தை தோமினிக் ரொசாரியோ தலைமையில் காலை 11:30 மணிக்கு திருப்பலியும், வினோபா நகர் பங்குதந்தை சின்னப்பன் தலைமையில் மாலை 6:00 மணிக்கு திருப்பலியும், புதுச்சேரி-கடலுார்  மறைமாவட்ட முதன்மைகுரு அருளானந்தம் தலைமையில் இரவு 7:30 மணிக்கு ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது.தொடர்ந்து நடந்து வரும் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் காலையில் சிறப்பு திருப்பலியும், இரவு அலங்கரிக்கப்பட்ட தேர்பவனியும் நடைபெறுகிறது.  முக்கிய விழாவாக வரும் 4ம் தேதி மாதத்தின் முதல் சனி திருப்பலியும், புதிய ஆலயத்தில் கோவை மாதாவின் மணிகள் நடத்தும் செபமாலை கண்காட்சி நடைபெறுகிறது.வரும் 5 ம் தேதி திருத்தலப் பெருவிழாவில் காலை 5:30 மணிக்கு விருத்தாசலம் முத்துச்சித்தர்  அமைதியகம் பங்குதந்தை பிச்சைமுத்து தலைமையில் சிறப்பு திருப்பலியும், காலை 7:30 மணிக்கு புதுச்சேரி--கடலுார் பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் கூட்டுத் திருப்பலியும், அன்றிரவு 7:30 மணிக்கு ஆடம்பர தேர்பவனி நடக்கிறது. 6ம் தேதி காலை 6:30  மணிக்கு நடக்கும் திருப்பலிக்கு பின் கொடியிறக்கத்துடன் ஆண்டுத் திருவிழா நிறைவடைகிறது.விழா ஏற்பாடுகளை, வில்லியனுார் ஆலய பாதிரியார்கள் பிச்சைமுத்து, ஜோசப் சகாயராஜ் மற்றும் வின்சென்ட் அமல்ராஜ் தலைமையில் விழாக்குழுவினர், பங்கு  பேரவையினர் மற்றும் பக்தர்கள் செய்துவருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை மீனாட்சி அம்மன் இன்று கோலாட்ட அலங்காரத்தில் காட்சியளிக்கிறாள்.ஒருமுறை பந்தாசுரனுக்கும், ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar