கீழக்கரை பத்திரகாளி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்



கீழக்கரை: கீழக்கரை சாலைத்தெருவில் உள்ள பத்திரகாளி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த அக்.,31 அன்று, முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், அனுக்ஞை விநாயகர், பூர்ணாகுதி நடந்தது. இன்று காலை கடம் புறப்பட்டு கோயிலை வலம் வந்தது. தொடர்ந்து கோயில் விமான கலசத்தில் ராஜாராம் பட்டர் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். மூலவர் பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. ஏற்பாடுகளை கோயில் விழா குழுவினர் செய்திருந்தனர்.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்