அயோத்தி ராம ஜென்ம பூமி கோவில் வளாகத்தில் துளசிதாசர் சிலை பிரதிஷ்டை



அயோத்தி; அயோத்தி ராம ஜென்ம பூமி கோவில் வளாகத்தில் துளசிதாசரின் பிரமாண்டமான சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.


அயோத்தி; அயோத்தி கோயிலில் குழந்தை ராமர் சிலை உள்ள நிலையில், கோயிலின் முதல் தளத்தில் மன்னர் ராமர் சிலையை வைக்க ஏற்பாடு தீவிரமாக நடைபெற்று வருகிறது. ராமர் தர்பாருடன், சிலை நிறுவும் நிகழ்ச்சி அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 15) ஸ்ரீ ராம் ஜன்மபூமி மந்திர் வளாகத்தில் உள்ள யாத்ரீகர்களுக்கான வசதி மையத்தின் கிழக்கு நுழைவாயிலுக்கு அருகில் நிறுவப்பட்ட கோஸ்வாமி துளசிதாசரின் சிலை, பூஜைக்குப் பிறகு முறையாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டு திறக்கப்பட்டது. இனி ஸ்ரீ ராம் ஜென்ம பூமி மந்திரை தரிசனம் செய்ய வருகை தரும் அனைத்து பக்தர்களும் கோஸ்வாமி துளசிதாசரையும் தரிசிக்க முடியும்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்