கோவை; கோவை, பீளமேடு அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் கோவிலில் மாசி மாதம் மூல நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. இதில் வெண்ணை காப்பு கவசத்தில் கம்பீரமாய் அனுமன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.