மாலுார்; ‘‘சிவராத்திரியைமுன்னிட்டு ஒரு லட்சம்பேருக்கு கங்கை நீர் வழங்கப்படும்,’’ என்று பா.ஜ., முன்னாள் அமைச்சர் கிருஷ்ணய்ய ஷெட்டிதெரிவித்தார்.
மாலுாரில் நேற்று அவர் அளித்த பேட்டி: நான் கடந்த 2008ல் அமைச்சராக இருந்த போது வைகுண்ட ஏகாதசிக்காக 1 லட்சம் பேருக்கு லட்டு வழங்கப்பட்டது. தற்போது கும்பமேளாவில் இருந்து 40,௦௦௦லிட்டர் கங்கை நீர்கொண்டு வரப்படுகிறது. சிவராத்திரி தினத்தன்று மாலுாரின் சங்கர நாராயணா கோவிலில் பூஜை நடத்தி, 1 லட்சம் பாட்டில்கள் மூலம் மாலுார், பெங்களூரு உட்பட பல நகரங்களில் பக்தர்களுக்கு கங்கை நீர் வழங்கப்படும். அது மட்டுமின்றி மாலுாரில் இருந்து 3,800 சிவாலயங்களுக்குபாட்டில்கள் மூலமும் அனுப்பப்படும். சிவராத்திரியில் இறைவனை பூஜித்தால் கோடி நன்மைகள் வீடு தேடி வரும். இவ்வாறு அவர்கூறினார். மாலுார் தாலுகா பா.ஜ., முன்னாள் தலைவர் பி.ஆர்.வெங்கடேஷ், டவுன் சபை உறுப்பினர் பானுதேஜா ஆகியோர் உடன் இருந்தனர்.