அயோத்தி ராமர் கோவிலில் குவிந்த பக்தர்கள்; ஜெய்ஸ்ரீராம் கோஷத்துடன் பரவசம்



அயோத்தி; அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம் ஜென்மபூமி மந்திரில் ராமரின் தெய்வீக தரிசனத்திற்காக இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.


உத்தரபிரதேசம் அயோத்தியில் கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி ராமர் கோவில் திறக்கப்பட்டது. இதையடுத்து, நாள்தோறும், ராம் ஜென்மபூமி மந்திரில் சராசரியாக 1 முதல் 1.5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில், இன்று நவமி தினத்தையொட்டி, சூரிய உதயத்திற்கு முன்பு ராமரை தரிசிக்க வேண்டும் என்ற நோக்கில், அயோத்தியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் நின்று பாலராமரை தரிசனம் செய்தனர். மகா கும்பமேளாவிற்கு வருகை தந்து பிரார்த்தனை செய்த பக்தர்கள், தொடர்ந்து அயோத்தியின் ஸ்ரீ ராம் ஜென்மபூமி கோயிலில் குவிவதால், பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்