பழநி; பழநி, தூர்நாச்சியம்மன் திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பழநி கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தூர்நாச்சியம்மன் திருக்கோயில் சண்முக நதி கரையில் உள்ளது. ஹிந்து சமய அறநிலைத்துறை சார்பில் கோயில் நிர்வாகம் கும்பாபிஷேக பணிகளை நிறைவு செய்தது. மார்ச் 26ல் முரட்டுக்காள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று (ஏப்.,4 ல்.,) காலை 8:00 மணிக்கு பிள்ளையார் வழிபாடு, யாக யாக பூஜைகளுடன் துவங்கியது. காப்பு கட்டுதல், முதல்க்கால வேள்வி துவங்கியது. நேற்று (ஏப்.,4 ல்.,) காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால வேள்வி நடைபெற்றது. தீபாராதனை நடைபெற்றது. நேற்று (ஏப்.,4 ல்.,) காலை 9:45 மணிக்கு இரண்டாம் கால வேள்வி நிறைவடைந்தது. தூர்நாச்சிஅம்மன், கன்னிமார் உள்ளிட்ட தெய்வ சன்னதிகளுக்கு பழநி கோயில் கும்பேஸ்வர குருக்கள் கும்பாபிஷேகம் செய்தனர் செய்தனர் அதன்பின் தீபாராதனை நடைபெற்றது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் இணை கமிஷனர்கள் மாரிமுத்து, கண்காணிப்பாளர் அழகர்சாமி பொதுமக்கள் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.