திருவெண்ணெய்நல்லுார்; திருவெண்ணெய்நல்லுார் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி வரும் 10ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. விழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் இரவு வீதியுலாவும் நடக்கிறது. தொடர்ந்து இன்று 6ம் தேதி 5 நாள் திருவிழாவும், 10ம் தேதி தேர் திருவிழாவும் நடைபெற உள்ளது.