அனுப்பர்பாளையம்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ் பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று காலை நடைபெற்றது. சிவன் மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உதவி ஆணையர் ரத்தானாம்பாள், செயல் அலுவலர் சங்கர சுந்ரேஸ்வரர், ஆய்வாளர் தினேஷ் குமார், ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. இதில், 11 லட்சத்து , 74 ஆயிரத்து, 387 ரூபாய், 21 கிராம் தங்கம், 138 கிராம் வெள்ளி ஆகியவற்றை பொது மக்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். காணிக்கை எண்ணும் பணியில் திருப்பூர் மகாவிஷ்ணு சேவா சங்கம் மற்றும் ஊர் பொது மக்கள் ஈடுபட்டனர்.