சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா; பொதுமக்கள் வரவேற்பு



திருப்புவனம்; திருப்புவனத்தில் இன்று சிறுவர்களின் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. சித்திரை திருவிழா மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட மக்கள் விரும்பும் மிகப்பெரிய திருவிழா. இந்தாண்டு திருவிழா நாளை காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மே 12ம் தேதி வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்க உள்ளார். அழகர் கோயிலில் இருந்து சீர்பாதம் தாங்கிகள் என அழைக்கப்படும் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அழகரை சுமந்து வருவார்கள். இதற்காக விரதம் இருந்து அழகரை தூக்கி வருவது வழக்கம், இதில் குறிப்பிட்ட சதவிகிதம் பேர் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்திலும் வசிக்கின்றனர். செல்போன், இண்டெர் நெட், இன்ஸ்டாகிராம், முகநூல் உள்ளிட்டவற்றால் இளையதலைமுறையினர் வசம் திருவிழாக்கள் பற்றிய எதிர்பார்ப்புகள், ஆர்வங்கள் குறைந்து விட்டாலும் சித்திரை திருவிழா மீதான ஆர்வம் மட்டும் குறைவதே இல்லை. ஒவ்வொரு வருடமும் அழகரை காண வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே இதற்கு சாட்சியாகும், சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த சிறுவர்கள் இணைந்து சித்திரை திருவிழாவை வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். மதுரை சித்திரை திருவிழா போன்றே கால அட்டவணை போட்டு ஒருவாரமாக கொண்டாடி வந்த சிறுவர்கள் இன்று அழகரை பூப்பல்லக்கில் வைத்து திருப்புவனம் நகர வீதிகளை வலம் வந்தனர். கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டபடி சிறுவர்கள் வலம் வந்தது பரவசத்தை ஏற்படுத்தியது. இதற்காக சிறுவர்கள் பலரும் தங்களது சேமிப்பில் இருந்து அலங்கார பொருட்கள் வாங்கி பூப்பல்லக்கு தயார் செய்துள்ளனர். திருப்புவனம் நகர வீதிகளில் அழகரை தூக்கி கொண்டு வலம் வந்தது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. 


சிறுவன் குமார் கூறுகையில் : எங்கள் பரம்பரையே சீர்பாதம் தாங்கிகள், அழகரை சுமந்து வலம் வருவது வழக்கம், இந்தாண்டு விடுமுறை என்பதால் அழகரை பூப்பல்லக்கில் வைத்து வலம் வந்தோம், இதற்காக பத்து நாட்கள் திருவிழா நடத்தினோம், என்றார். சிறுவர்கள் என்றாலும் முறையாக சுவாமியை அலங்கரித்து வலம் வந்தது பாராட்டுக்குறியது.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்