பெரியூர்பட்டி பூமாரியம்மன் கோவில் திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்



செந்துறை; நத்தம் செந்துறை அருகே பெரியூர்பட்டி பூமாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதில் கடந்த 27-ம் தேதி தீர்த்தம் அழைத்து வரப்பட்டு காப்புகட்டுதலுடன் விழா தொடங்கியது.இதில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது.தொடர்ந்து பக்தர்கள் முளைப்பாரி, பால்குடம், அக்னிசட்டி எடுத்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பெரியூர்பட்டி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்