செல்வ முத்துமாரியம்மன் கோவில் திருவிழா; பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்



செந்துறை; நத்தம் செந்துறை அருகே சேத்தூரில் செல்வமுத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதில் கடந்த 27-ம் தேதி கரந்தமலை தீர்த்தம் அழைத்து வரப்பட்டு காப்புகட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. மறுநாள் அம்மனுக்கும், கம்பத்திற்கும் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது.பின்னர் கோவில் திருத்தேர்ச்சட்டம் ஏற்றுதலும்,தோரணம் கட்டுதலும் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் முளைப்பாரி, பொங்கல் வைத்தல், மாவிளக்கு, அக்னிசட்டி, கிடாய் வெட்டுதல், மற்றும் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.இன்று பாரிவேட்டை மற்றும் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெற்றது.இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சேத்தூர் ஊர் பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்