செங்காடு காமாட்சி அம்மன் கோவில் பொங்கல் விழா; தீர்த்தக்குடம் ஊர்வலம்



அவிநாசி; செங்காட்டில் எழுந்தருளியுள்ள காமாட்சி அம்மன் கோவில் பொங்கல் விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.


அவிநாசி சேவூர் ரோட்டில்,செங்காடு பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் 58ம் ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள்,அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். இன்று படைக்கலம், அம்மை அழைத்தல், திருக்கல்யாணம், மாவிளக்கு ஊர்வலம், பொங்கல் வைத்தல், திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. நாளை மஞ்சள் நீராட்டு விழா, முத்துக்குமாரசாமி பொங்கலுடன் விழா நிறைவு பெறுகிறது. கோவில் விழா கமிட்டி சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்