கோவில் கருவறைக்குள் மண்டை ஓடு வைத்து பூஜை; விசாரிக்க கோரிக்கை



காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தை அடுத்த, திருமங்கலம் கிராமத்தில், ஏரிக்கரையோரமாக பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த அம்மன் கோவில் கருவறையில், மண்டை ஓடுகளை வைத்து பூஜை நடந்துள்ளது. அம்மனை தரிசிக்க நேற்று பகலில்சென்ற பக்தர்கள், இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். கோவிலில் பூசாரிகள் யாரும் இல்லை. கருவறையில் மனித மண்டை ஓடுகள் வைத்து பூஜை செய்யப்பட்டிருப்பது, பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, சுங்குவார்சத்திரம் போலீசார் விசாரிக்க வேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்