கிணத்துக்கடவு மாகாளியம்மன் கோவிலில் திருக்கல்யாணம் கோலாகலம்



கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, செட்டியக்காபாளையம் மாகாளியம்மன் கோவிலில் இன்று திருக்கல்யாணம் நடந்தது.


கிணத்துக்கடவு, செட்டியக்காபாளையம் மாகாளியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சிகள், 3ம் தேதி, நோன்பு சாட்டுதலுடன் ஆரம்பமானது. 10ம் தேதி, பக்தர்கள் பலர் பூவோடு எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர். 11ம் தேதி, அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டார்கள். தொடர்ந்து மாவிளக்கு எடுத்தல் மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்வு நடந்தது. 13ம் தேதி, காலை 6:00 மணிக்கு, சுவாமி திருவீதி உலா, முளைப்பாரி எடுத்தல் மற்றும் மஞ்சள் நீராடுதல் நடக்கிறது. மதியம் 12:00 மணிக்கு, சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார பூஜை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்டவை நடக்கிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்