மஞ்சள் நீராடி நகர்வலம் வந்த நத்தம் மாரியம்மன்: திரளான பக்தர்கள் தரிசனம்



நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


நத்தம் மாரியம்மன் கோயில் மாசி திருவிழா பிப். 23 கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறுநாள் உலுப்பகுடி கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி மஞ்சள் ஆடைகள் அணிந்து காப்பு கட்டி 15 நாட்கள் விரதம் தொடங்கினர். தொடர்ந்து மாரியம்மனுக்கு மஞ்சள் திருப்பாவாடை ஊர்வலமாக எடுத்து வந்து காணிக்கையாக செலுத்தபட்டது. தொடர்ந்து கோவில் முன்பாக கழுகு மரம் ஊன்றப்பட்டு பின்னர் கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது.அதைதொடர்ந்து 15 நாட்கள் விரதம் இருந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள்பூக்குழியில் இறங்கினர். தொடர்ந்து மாரியம்மன் இன்று காலையில் கோவிலில் இருந்து புனித மஞ்சள் நீராடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று அம்மன் குளத்திற்கு சென்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்