கோவை; காஞ்சி மகா பெரியவரின் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு மாசி அனுஷம் நட்சத்திரத்தில் மகா பெரியவரின் விக்ரகத்திற்கு சிறப்பு பூஜை. அபிஷேகம் ஆகியன நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு கோவை வடவள்ளி கே. எஸ். கார்டன் பகுதியில் அமைந்துள்ள மகா சங்கரா மினிஹாலில் நடந்தது.