காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதி மஹாஸ்வாமி இன்று புதன்கிழமை காலை 9.45 மணிக்கு வருகை தந்தார். ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதி மகாஸ்வாமி ஜி, ஸ்ரீ ஸ்ரீ ஜகத்குரு மகாசன்ஸ்தானம் சிருங்கேரி பீடம் அவர்களை ஸ்ரீகாளஹஸ்தி எம்.எல்.ஏ பொஜ்ஜல. சுதீர் ரெட்டி, கோயில் அறங்காவலர் குழு தலைவர் கொட்டே. சாய் பிரசாத், கோயில் செயல் அலுவலர் பி.கே.வெங்கடேசுலு ஆகியோர் கோபுரம் அருகில் இருந்து பூர்ண கும்ப வரவேற்பு அளித்து அழைத்து சென்றனர். தொடர்ந்து, ஞானப் பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் அபிஷேகத்தில் பங்கேற்று சுவாமிகள் தரிசனம் செய்தார். பின்னர், கோயில் வேதப் பண்டிதர்கள் ஆசிர்வாதம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்கள் குர்ரப்ப செட்டி, கோபிநாத், பகதாலா முரளி, லக்ஷ்மம்மா, சாவித்திரி, கோயிலின் தலைமை அர்ச்சகர்கள் சம்மந்தம், கருணாகர் குருக்கள் மற்றும் கோயில் துணை செயல் அதிகாரிகள் மாலினி, லோகேஷ்பாபு, மேற்பார்வையாளர்கள் நாகபூஷணம், ஸ்ரீஹரி, கோயில் ஆய்வாளர் வெங்கடசுவாமி, வேத பண்டிதர்கள், அர்ச்சகர்கள் பங்கேற்றனர்.