கொங்கு விநாயகர் மற்றும் அரச மர விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்



அவிநாசி: அவிநாசி சேவூர் ரோட்டில் உள்ள கொங்கு கலையரங்க வளாகத்தில் எழுந்தருளியுள்ள கொங்கு விநாயகர் மற்றும் அரச மர விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது.


அவிநாசி அடுத்த செம்பியநல்லூர் ஊராட்சியில் உள்ள கொங்கு கலையரங்க வளாகத்தில் எழுந்தருளியுள்ள கொங்கு விநாயகர் மற்றும் அரசமர விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது. திருக்கயிலாயப் பரம்பரை திருபேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையில் தேவார திருமுறைகளை அருளாளர்கள் பாட கும்பாபிஷேகப் பெருவிழா நடைபெற்றது. முன்னதாக திருவிளக்கு மற்றும் திருமகள் வழிபாடு, திருக்குடங்கள் நிறுவுதல்,விநாயகர் வழிபாடு ஆகியவை நடந்தது. அதனை தொடர்ந்து கொங்கு விநாயகர் மற்றும் அரச மர விநாயகர் கோவில் கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கொங்கு வேளாளர் அறக்கட்டளை, கொங்கு வேளாளர் இளைஞர் மன்றம், கொங்கு கலையரங்கம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்