மேட்டுப்பாளையம் சுந்தர விநாயகர் கோவில் புதுப்பிக்கும் பணி ஜரூர்



மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் உள்ள பழமையான சுந்தர விநாயகர் கோவில், பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.


மேட்டுப்பாளையம் சொக்கலிங்கம் சந்து வீதியில், பழமையான சுந்தர விநாயகர் கோவில், காரமடை குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவில் அதிகாரியின் கட்டுப்பாட்டில், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு கீழ் உள்ளது. அரச மரம் வேர், இக்கோவில் கட்டடத்தை சேதப்படுத்தியது. இக்கோவிலில் மூலிகைகளால் வரையப்பட்ட முருகன், விநாயகர், மகாலட்சுமி, கருடன், சிவன் உட்பட 10க்கும் மேற்பட்ட கடவுள்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஹிந்து அறநிலையத்துறை சார்பில், பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள், ரூ.47 லட்சத்தில் முழுவீச்சில் நடந்து வருகின்றன. ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தற்போது சுற்றுச்சுவர் கட்டுதல் மற்றும் கோவிலின் உள் மற்றும் வெளிப்புற சுவர்கள் பூசும் பணி ஓரளவு முடிந்துள்ளது. விரைவில் பணிகள் அனைத்தும் நிறைவடையும்’ என்றார்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்