பொள்ளாச்சி: பொள்ளாச்சி, நவமலை பத்ரகாளியம்மன் கோவிலில் வரும், 29ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. பொள்ளாச்சி அருகே நவமலை மின்வாரிய முகாம் பத்ரகாளியம்மன் மற்றும் மாரியம்மன் கோவிலில் திருவிழா கடந்த, 21ம் தேதி காப்பு கட்டுதல், கொடியேற்றுதல் மற்றும் கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. கடந்த, 22ம் தேதி முதல் வரும், 27ம் தேதி மாலை, 6:00 மணிக்கு தினமும் தீர்த்த அபிேஷகம், கட்டளை பூஜைகள், அபிேஷக ஆராதனைகள் நடக்கிறது. வரும், 28ம் தேதி காலை, 6:00 மணிக்கு தெய்வகுளம் தீர்த்தம் எடுக்க செல்லுதல், மதியம், 12:00 மணிக்கு தீர்த்த அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு அம்மன் அழைப்பு, சக்தி கலசம் எடுத்து வருதல்; 29ம் தேதி காலை, 9:00 மணிக்கு மாவிளக்கு, சீர்முறை எடுத்து செல்லுதல், காலை, 11:00 மணி முதல் மதியம், 12:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. மதியம், 12:00 மணிக்கு அன்னதானம், மாலை, 5:00 மணிக்கு பூவோடு எடுத்தல், 30ம் தேதி காலை, 11:00 மணிக்கு சுவாமி உலா வருதல், மஞ்சள் நீராட்டு விழா மற்றும் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.