அத்திப்பட்டியில் சித்திரை திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்



பேரையூர்: பேரையூர் அருகே அத்திபட்டியில் புது மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்.24ல் கூடிய கொடியேற்றத்துடன் தொடங்கி ஏப்.27 வரை 4 நாட்களாக நடந்தது. தினமும் இரவு அம்பாள் சிங்க வாகன அலங்காரத்தில் ஊர்வலம் நடந்தது. பக்தர்கள் உருண்டு கொடுத்தல், மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல், அக்னி சட்டி எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. அத்திபட்டி,சலுப்பட்டி,எஸ்.கோட்டைப்பட்டி, மங்கல்ரேவு, சின்னப்பூலாம்பட்டி, பெரியபூலாம்பட்டி,பெரியபூலாம்பட்டி, தொட்டணம்பட்டி, செம்பட்டி உள்ளிட்ட 18 கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டு நேர்த்திக் கடனை செலுத்தினர். உசிலம்பட்டி, பேரையூர்,திருமங்கலம் பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்