பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில் வளர்பிறை ஏகாதசி சிறப்பு வழிபாடு



பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் வளர்பிறை ஏகாதசியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில், இன்று வளர்பிறை ஏகாதசியை முன்னிட்டு, காலை, 10:30 மணிக்கு உற்சவ மூர்த்திகளுக்கு திவ்ய திருமஞ்சன அபிேஷகம் நடைபெற்றது. காலை, 11:00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடைபெற்றது. மதியம், 12:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் வளர்பிறை ஏகாதசி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்