1,300 ஆண்டுகள் பழமையான கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு



திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே, கொடியம் கிராம பெரிய ஏரிக்கரையில், கொற்றவை சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. மக்கள் அதை, வன துர்க்கையாக வணங்குகின்றனர்.


விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கூறுகையில், ‘‘இந்த சிற்பம், ௭ அடி உயர பலகை கல்லில் வடிக்கப்பட்டுள்ளது. எட்டு கரங்களுடன் காட்சியளிக்கும் கொற்றவை, எருமை தலை மீது கம்பீரமாக நின்றிருக்கிறார். வலது கரத்தின் மீது, கிளி அமர்ந்து உள்ளது.


‘‘வலது காலின் கீழே கொற்றவையின் வாகனமான மானும், திரிசூலமும் உள்ளன. கொற்றவை காலடியின் வலது பக்கத்தில், பூஜை செய்யும் அடியவர் உள்ளார்.


‘ ‘இடது பக்கத்தில், தலைப்பலி வீரன் கத்தியுடன் உள்ளார். அவரது தலை துண்டிக்கப்பட்டு, வெற்றுடல் மட்டுமே காணப்படுகிறது. ஐந்து மனித உருவங்களுடன் கூடிய இந்த அரிய கொற்றவை சிற்பம், 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த, பல்லவர் காலத்தை சேர்ந்தது,’’ என்றார்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்