ஓணம் பண்டிகை முன்னிட்டு அவிட்டத்தல்லு நிகழ்ச்சி கோலாகலம்



பாலக்காடு: ஓணம் பண்டிகையை முன்னிட்டு, பாலக்காடு பல்லசேனாவில், போர் அழைப்பை நினைவூட் டும் வகையில், அவிட்டத் தல்லு நிகழ்ச்சி கோலாகல மாக நடந்தது.


கேரள மாநிலத்தில், ஓணம் பண்டிகையை, கடந்த மூன்று நாட்களாக மக்கள் கோலாகலமாக கொண்டாடுகின்றனர். பண்டிகையின் ஒரு பகுதி யாக, பாலக்காடு மாவட் டம் பல்லசேனாவில் அவிட்டம் நாளான இன்று மாலை, 4:30 மணிக்கு, நாயர் சமுதாயத்தினர் நடத் திய, அவிட்டத்தல்லு என்ற, முதுகில் அறையும் நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது. ஊர் மன்னர் குரூர் நம்பிடியை ஏமாற்றி கொலை செய்ததால் ஆத்திரமடைந்த மக்கள், போர் அழைப்பு விடுத் ததை நினைவூட்டும் வகையில், வேட்டைக் கொருமன் கோவில் வளா கத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது. இரு அணியினர், ஒருவ ருக்கொருவர் முதுகில் பல மாக அறைவது தான் இந்த அவிட்டத்தல்லு நிகழ்ச்சி யின் சிறப்பு. ஒருவருக்கொ ருவர் அறைந்து செல்வது, உடற் பயிற்சி, குளத்தில் குளித்தல், சயன பிரதக் ஷிணம் ஆகியவற்றை காண, மாநிலத்தின் பல பகுதியில் இருந்து மக்கள் திரண்டு வந்தனர். இதேபோல், திருவோண நாளான நேற்று மாலை பல்ல சேனா தல்லுமன்னம் பகுதி யில், இதர சமுதாயத்தி னர் திருவோணத் தல்லு நிகழ்ச்சி நடத்தி ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்