சோமனூர் சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் பூணூல் அணிந்து பக்தர்கள் வழிபாடு



சோமனூர்: சோமனூர் சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், பூணூல் அணியும் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


சோமனூர் சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தை ஒட்டி, பூணூல் அணியும் விழா நடந்தது. முன்னதாக, சிறப்பு ஹோமத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து, அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜை மற்றும் மகா தீபாராதனை நடந்தது. பின்னர், கோவிலை சேர்ந்த பக்தர்கள், பய பக்தியுடன் பூணூல் அணிந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்