பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவ தேரோட்டம்



உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் நடந்தது.


உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 13ம் தேதி துவங்கியது. அன்று இரவு திருப்பல்லக்கிலும், விசேஷத் திருமஞ்சனம், ததியாராதனமும் நடந்தது. 14ம் தேதி இரவு சுவாமி சந்திர பிரபை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. 15ம் தேதி இரவு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அனுமந்த வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. 16ம் தேதி சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. காலை 11 மணியளவில் திருப்பல்லக்கில் பெருமாள் நாச்சியார் திருக்கோலச் சேவையும், விசேஷத் திருமஞ்சனமும். ததியாராதனமும் நடந்தது. இரவு சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தங்க கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. இன்று காலை 9 மணியளவில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரில் சுவாமி வைக்கப்பட்டு தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்து சுவாமியை வழிபட்டனர். வரும் 24ம் தேதி வரை நடக்கும் பிரம்மோற்சவ விழா தினசரி சுவாமி வீதியுலா நடக்கிறது.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்