வடலூர் அருகே அமைகிறது வள்ளலார் கோட்டம்



வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை உள்ளது. வடலூர் அடுத்த கருங்குழி பகுதியில் வள்ளலார் தங்கி திருஅருட்பா எழுதிய போது, வெளிச்சத்திற்காக வைத்திருந்த விளக்கின் அருகில் இருந்த தண்ணீரை எண்ணெய் என நினைத்து விளக்கை எரித்த போது இரவு முழுவதும் விளக்கு எரிந்தது என்பதே வரலாறு ஆகும். இங்கு வள்ளலார் தங்கி இருந்த காலகட்டத்தில் திருவருட்பாவின் முதல் நான்கு திருமுறைகளை வெளியிட்டுள்ளார் என, சன்மார்க்கர்கள் கூறுகின்றனர். இந்த சிறப்பு வாய்ந்த கருங்குழி பகுதியில் வள்ளலார் கோட்டம் என்ற பெயரில், வள்ளலாரின் கல்வெட்டுகள் கொண்ட நிலையம் ஒன்றை, அருட்பா பதிப்பகம் மற்றும், சன்மார்க்கர்கள் சார்பில் அமைக்க திட்டமிட்டுள்ளனர். இங்கு வள்ளலார் எழுதிய, 6 ஆயிரம் பாடல்கள் கல்வெட்டுகளாக அமைக்கப்பட உள்ளன. இப்பணியில் ஈடுபட்டுள்ள கருங்குழி கிஷோர் குமார் கூறியதாவது : சன்மார்க்கர்கள் ஒன்றிணைந்து வள்ளலாருக்காக பிரமிடு கோணத்தில், கருங்குழி பகுதியில் வள்ளலார் கோட்டம் என்ற நினைவகத்தை அமைக்க உள்ளோம். சுமார், 4 ஏக்கர் பரப்பளவில் ரூ.,20 கோடி செலவில், இந்த வள்ளலார் கோட்டம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான இடம் கருங்குழி பகுதியின் பிரதான பகுதியில் இறுதி செய்யப்பட்டு உள்ளது. இரண்டு ஆண்டுகளில் இப்பணிகள் முற்றிலுமாக முடிந்து வள்ளலார் கோட்டம் திறக்கப்பட உள்ளது. வள்ளலார் எழுதிய திருஅருட்பா பாடல்களின், 6 ஆயிரம் தொகுப்பில் முதல், 5 திருமுறைகள் கல்வெட்டுகளாக வடிக்கும் பணி மேட்டுக்குப்பம் பகுதியில் நடந்து முடிந்துள்ளது. ஆறாம் திருமுறை பணிகள் முடிந்தால் கல்வெட்டுப் பணிகள் முழுமை அடையும். வள்ளலார் திருவருளால் வள்ளலார் கோட்டம் பணிகளை சன்மார்க்கர்கள் அனைவரும் இணைந்து சிறப்பாக செயல்படுத்த உள்ளோம். வள்ளலாரின் ஜீவகாருண்ய கொள்கையையும், ஆன்மீக சிந்தனையையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பதில் பெருமை கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்