தென் திருப்பதி வாரி கோவிலில் தங்கத்தேரில் வலம் வந்த மலையப்ப சுவாமி



மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே தென் திருப்பதி ஸ்ரீ வாரி கோவிலில், வருடாந்திர பிரம்மோற்சவம் நிகழ்ச்சி கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து பெரிய சேஷ வாகனம், சின்ன சேஷ வாகனம், உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின் தொடர்ந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மாலை சமர்ப்பித்தல் வைபவம் நடந்தது. தொடர்ந்து மலையப்ப சுவாமி மோகினி திருக்கோலத்தில் நான்கு மாட வீதிகளில் வலம் வந்தார். அவருடன் கிருஷ்ணரும் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார். வசந்த உற்சவத்தைத் தொடர்ந்து தங்கத்தேரில் மலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகளில் வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து, கோவிந்தா கோஷம் எழுப்பி மகிழ்ந்தனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்