முதல்வர் விஜய்க்கு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக பிரசாதம்



சென்னை; மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் பிரசாதம் இன்று தமிழக முதல்வர் விஜய்க்கு  நேரில் வழங்கப்பட்டது.


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், 17 ஆண்டுகளுக்கு பின், மகா கும்பாபிஷேகம் செப்., 17ம் தேதி கோலாகலமாக நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இந்நிலையில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் பிரசாதம் இன்று தமிழக முதல்வர் விஜய்க்கு  நேரில் வழங்கப்பட்டது. ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் முதல்வர் விஜய்க்கு பிரசாதை்தை வழங்கினார். அப்போது, முதலமைச்சர் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றதற்கு தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார். கும்பாபிஷேக நிறைவை தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோயிலில் செப்.,18 முதல்  மண்டல பூஜை நடைபெற்று வருகிறது.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்