ஸ்ரீநாராயண குரு கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு



வால்பாறை: வால்பாறை கக்கன்காலனியில் உள்ள ஸ்ரீநாராயண குரு சுவாமி கோவிலில், வாரம் தோறும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. குருதேவரின் சமாதி தினத்தையொட்டி,  ஸ்ரீநாராயண குரு சுவாமிக்கு  நேற்று காலை, 9:00 மணிக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தன. பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் பஜனை பாடல்களை பாடினர். மதியம், 12:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகளை வால்பாறை எஸ்.என்.டி.பி., தலைவர் ரவி, செயலாளர் சுரேஷ், பொருளாளர் பிரதீப் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்