பூரி ஜெகந்நாதர் கோவிலில் தினமும் நடக்கும் அதிசய நிகழ்வு: ஒருநாள் தடைபட்டால் 18 ஆண்டுகள் கோயில் மூடப்படும்!



பகிர்க copied

ஒடிசா: ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோவிலில், சுமார் 214 அடி உயரமுள்ள கோபுரத்தின் உச்சிக்குச் சிறப்புப் பயிற்சி பெற்ற கோவில் சேவகர்கள் தினமும் பாதுகாப்புக் கயிறு இன்றி ஏறி, புனிதக் கொடியை மாற்றுகின்றனர். நூற்றாண்டுகளைக் கடந்த பாரம்பரியமாகத் தொடரும் இந்தச் சடங்கு, பக்தர்களையும் பார்வையாளர்களையும் வியப்பில் ஆழ்த்துகிறது.


கோவிலின் உயரமான கோபுரத்தில் ஏற்றப்பட்டிருக்கும் புனிதக் கொடியைத் தினமும் மாற்றுவது வழக்கமாக உள்ளது. இதற்காகப் பயிற்சி பெற்ற சேவகர்கள் எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி கோபுரத்தின் உச்சிக்குச் சென்று கொடியை மாற்றுகின்றனர். மிகுந்த உயரத்திலும் ஆபத்தான சூழலிலும் நடைபெறும் இந்தப் பணி, அவர்களின் அனுபவத்தையும் திறமையையும் வெளிப்படுத்துகிறது.


நம்பிக்கை: கோவில் மரபு சார்ந்த நம்பிக்கையின்படி, ஒருநாள் இந்தக் கொடி மாற்றும் சடங்கு நடைபெறாமல் போனால், கோவில் 18 ஆண்டுகள் ஆன்மிக ரீதியாக மூடப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நம்பிக்கையின் காரணமாகவே, தினமும் தவறாமல் கொடி மாற்றும் சடங்கு நடைபெற்று வருவதாகப் பக்தர்கள் தெரிவிக்கின்றனர். பக்தி, பாரம்பரியம், துணிச்சல் ஆகியவற்றின் அடையாளமாகத் திகழும் பூரி ஜெகந்நாதர் கோவிலின் இந்தக் கொடி மாற்றும் சடங்கு, இந்தியாவின் தனித்துவமான கோவில் மரபுகளில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்