மகரஜோதியின் தத்துவம்



இறைவனுக்கென்று உருவ வழிபாடு பிற்காலத்தில் தான் இருக்க முடியும். ஏனெனில் மனிதன் தோன்றிய காலத்தில் உலோகங்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை. கற்களில் துவங்கிய சிற்பக்கலை படிப்படியாக வளர்ந்து, பிற்காலத்தில் ஐம்பொன் வரை சென்றது. எனவே மனிதன் துவக்க காலத்தில் ஒளியையே தெய்வகமாக வழிபட்டுள்ளான். சூரிய வழிபாடு தான் முதலில் தோன்றியது. நம்மை மீறிய ஒரு சக்தி இருக்கிறது என மனிதன் பகுத்தறிந்த போது ஜோதி வடிவாக அவன் இறைவனைக் கண்டான். அதனால்தான் வள்ளலார் இறைவனை அருட்பெருஞ்ஜோதி என அழைத்தார். இறைவன் திருவண்ணாமலையில் ஜோதியாய் காட்சி அளிக்கிறார்.


கார்த்திகை அன்று ஏற்றப்படும் தீபம் ஆண்டு முழுவதும் எரிவது அதனால் தான். இதே போல் தான் ஐயப்பசுவாமியும் ஜோதி வடிவாக காட்சி அளிப்பது, பொன்னம்பல மேட்டில் மகரசாந்தியன்று அவர் ஆண்டுதோறம் இந்த கலிகாலத்திலும் ஜோதி வடிவாய் காட்சி அளிக்கிறார். பக்தர்கள் சன்னிதானத்தைச் சுற்றியுள்ள சன்னிதானம், பாண்டித்தாவாளம், புல்மேடு, சரங்குத்தி, நீலிமலை, மரக்கூடம், மலைஉச்சி, சாலக்கயம் மற்றும் அட்டதோடு ஆகிய 9 இடங்களில் இருந்து மகரஜோதியைக் காணலாம்.



ஒவ்வொரு மாதமும் நடை சாத்தும்போது, ஹரிவராசனம் பாடிவிட்டு, கிலோ கணக்கில் பசுமையான திருநீற்றை ஐயப்பன்மேல் சாத்துவார்கள். அத்துடன், ஐயப்பனின் சின் முத்திரையின் மேல் ஒரு ருத்திராட்ச மாலையைப் போடுவார்கள். இதற்கு தவக்கோலம் என்று பெயர் அப்போது, ஒரு விளக்கையும் ஏற்றி வைப்பார்கள். அந்த விளக்கானது, மீண்டும் அடுத்த மாதம் நடை திறக்கப்படும் வரை எரிந்து கொண்டே இருக்கும் அதிசயம், தவறாமல் அரங்கேறுகிறது. கோயில் கதவு திறந்து, உலகத்தின் பார்வை அந்தக் கோயிலுக்குள் நுழைந்ததும், ஐயப்பனின் தவக்கோலம் கலைந்துவிடுகிறது. அடுத்த நிமிடமே அந்த விளக்கும் அணைந்து விடுகிறது. சின்முத்திரையின் மேல் போடப்பட்ட ருத்திராட்ச மாலையும் கை மாறி இருக்கும். இந்த அதிசயத்தைக் காணக் கண் கோடி வேண்டும். இந்தியாவில் உள்ள மற்ற கோயில்களைப் போல், சபரிமலை ஐயப்பன் கோயில் வருடம் முழுவதும் திறக்கப்படுவதில்லை. ஒவ்வொரு மலையாள மாதத்தின் கடைசி நாள் மாலை 5 மணிக்குக் கோயில் நடைதிறக்கப்பட்டு, அடுத்து வரும் மலையாள மாதத்தின் 5-வது நாளன்று நடை சாத்தப்படுவது வழக்கம். ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை, மகர ஜோதி பூஜைகள் இங்கு மிகவும் விசேஷமானவை.

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்