கார்த்திகை துவங்கியதும் பக்தர்கள் ஐயப்ப பக்தியில் மூழ்கிப் போகின்றனர். மாலை அணிந்து, விரதம் இருந்து, பக்திச்செறிவுடன் திருநாமத்தைச் சொல்லி சபரிமலைக்கு செல்கின்றனர். முழு ஈடுபாட்டுடன் விரதங்களை கடைபிடிக்கும் பக்தன், சுவாமி ஐயப்பனின் பரிபூரண அனுக்கிரகம் பெற்றிருப்பதால், பக்தனையே ஐயப்பனாக மற்றவர்கள் மதிக்கிறார்கள்.
பாவங்கள் நீங்க ஐயப்பனை தரிசித்தால் போதும் என்பதால் ஆண்டுதோறும் இருமுடி ஏந்தி சபரிமலைக்கு புனித யாத்திரை செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை பல மடங்காகப் பெருகி வருகிறது. அவ்வாறு ஆர்வத்துடன் முதன்முறையாக சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லவிரும்பும் கன்னி சாமிகளுக்கு, குருசாமிகளின் வழிகாட்டுதலைப் பெற உதவுகிறது.