சபரிமலையில் ரூ.20 கோடி செலவில் புதிய பாலம் கட்டப்படுகிறது

டிசம்பர் 13,2018சபரிமலை: சபரிமலையில் ராணுவம் அமைத்து கொடுத்த பெய்லி பாலம் அப்புறப்படுத்தப் படுகிறது. பதிலாக புதிய மேல்மட்ட பாலம் 20 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுகிறது. சபரிமலையில் தரிசனம் முடிந்து திரும்பும் பக்தர்களுக்காக சன்னிதானத்தின் பின்புறம் இந்த பாலம் அமைக்கப்பட்டது.


40 மீட்டர் நீளம், 3.3 மீட்டர் அகலத்தில் 75 லட்சம் ரூபாய் செலவில் 2011-ல் ராணுவத்தின் சென்னை இன்ஜினியரிங் பிரிவினர் கட்டி முடித்தனர்.தற்போது பாலத்தின் இரும்பு பாளங்கள் துரு பிடிக்க தொடங்கியுள்ளன. இந்த பாலத்தை பக்தர்கள் அதிகம் பயன் படுத்தவில்லை. பாலம்வழியாக சென்றால் நீலிமலையை விட செங்குத்தான படிக்கட்டுகளில் ஏறித்தான் சந்திராங்கதன் ரோட்டுக்கு செல்ல முடியும்.எனவே பாலத்தை அப்புறப்படுத்தி, சபரிமலை மாஸ்டர்பிளானில் புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதன்படி சந்தி ராங்கதன் ரோட்டையும்- சன்னிதானத்தில் கோசாலையின் பின் புறத்தையும் இணைத்து புதிய பாலம் அமைகிறது. இதன் உத்தேச மதிப்பீடு 20 கோடி ரூபாய். நடப்பு சீசன் 2019 ஜன., 20ல் முடிந்த உடன் பெய்லி பாலம் அப்புறப்படுத்தப்படும். சபரிமலை உயர் அதிகார கமிட்டி அனுமதி அளித்ததும் புதிய பாலத்துக்கான பணி தொடங்கும் என்றும், 2019 நவம்பரில் தொடங்கும் அடுத்த சீசனுக்குள் முடிக்க திட்டமிடப் பட்டுள்ளதாகவும் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் கூறினார்.இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டதும் சன்னிதானத்தின் முன்புறம் தற்போது பம்பை செல்ல பக்தர்கள் பயன்படுத்தும் மேல்நடை பாதை பக்தர்கள் தங்குமிடமாக மாற்றப்படும்.


சபரிமலை 18 படிகளும் அதன் சிறப்பும்!

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்