"வாழ்க்கை தரத்தை உயர்த்தும் ஆசை எல்லோருக்கும் இருக்கும்; ஆனால், அது ஒரு போதும் தணிக்க முடியாத ஒரு தாகம் என்பது பலருக்கு புரிவதில்லை. புலன் இன்பங்களை தேடுவதற்கும், தேவைகளை பெருக்குவதற் கும். கடைசியில் கவலையின் ஆழத்தில் மூழ்குவதற்கும் அதுதான் வழி வகுக்கிறது. உண்மையில் செல்வம் ஒரு ஆபத்தான பலமாகும். பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற அரிப்பை அடக்க எந்த சவுக்காலும்
- ஸ்ரீ சத்ய சாய் பேசுகிறார், தொகுதி 6
உலகை ஆட்டி படைக்கும் நுகர்வு கலாசாரம், ஆசைகளை உறங்க விடா மல் மேலும் மேலும் விரிவுபடுத்திக் கொண்டே போகிறது. அழிவுக்கு வழி காட்டும் அந்த உத்தியால் இயக்கப் படும் இவ்வுலகில், ஸ்ரீ சத்ய சாய்பா பாவின் ஆசைகளுக்கு உச்சவரம்பு என்ற தத்துவம் ஓர் ஆழ்ந்த ஆன் மிக மற்றும் சுற்றுச்சூழல் ஞானமாக தனித்து நிற்கிறது. பாபா 1970களிலேயே இதனை அறிமுகம் செய் தாலும், இந்தக் கருத்து 21 ம் நூற்றாண்டில் முன் னெப்போதையும் விட மிகவும் பொருத்தமானதாகி விட்டது. அதன் எளி மையும் நிலைத்தன்மை யும் உள் அமைதியை நோக்கிய தெளிவான பாதையை காட்டு கிறது.
சவரம்பு என்பது அனைத்தையும் துறப்பது அல்ல; சுய கட்டுப்பாடுக் கான அழைப்பு அது. ஆசைகள்தான் மனி தனின் அமைதியின் மைக்கு மூல கார ணம் என்று பாபா கூறி னார். “உங் கள் ஆசைக ளுக்கு ஒரு உச்சவரம்பு வையுங்கள். ஞானத்தா லும் கரு ணையாலும் அவற்றை கட்டுப்படுத் துங்கள்" என்றார். ஆசைகள் சுட்டுப்படுத்த தவறினால் அது வாழ்க்கை யின் மீதே அதி ருப்தி அடை யும் நிலைக்கு தள்ளுவதோடு நிற்காது; மனி தனை சுற்றி யுள்ள சூழல் முற்றிலுமாக சீரழிவதற்கும், சமத்துவமின்மை, சமூக அமைதி யின்மை ஆகியவை பரவுவதற்கும் பாதை அமைக்கின்றது என்று பாபா போதித்தார்.முடிவில்லாத ஆசையின் காரண மாசு வாழ்க்கையே முடியும் வரையி லும் பொருள் இன்பங்களை துரத்துவ தற்கு பதிலாக, வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்து, மதிப்புமிக்க பொருட்களை காட்டிலும் மனித பண்புகளுக்கு முன் னுரிமை அளிக்க பாபா வலியுறுத்தினார்.
நுகர்தலுக்கு அப்பால் ஒரு பார்வை
உலகத்தை நிராகரிக்கும் துறவி யின் போதனைகளை போல் அல் லாமல், சத்ய சாய்பாபாவின் செய்தி அனைத்தையும் சமநிலை படுத் துவதாக அமைந்தது. அவர் முன் னேற்றத்தையோ வசதிகளையோ எதிர்க்கவில்லை. எதுவும் அளவற்று போய்விட கூடாது என்று தான் ஆசைகளுக்கு எச்சரித்தார்.
"சாப்பிடுவதற்கும் குடிப்பதற்கும் மட்டும் பிறக்கவில்லை மனிதன். பிற ருக்கு உதவி செய்வதற்கும் தன் தெய் வீகத்தை உணர்வதற்கும் பிறந்தவன்" என்று அவர் சீடர்களுக்கு நினைவூட்டினார். பாபாவின் அமைப்புகள் இந்த கொள்கையை முழுமையாக பிரதி பலிக்கின்றன. கோடிக்ககணக்கான மக்களுக்கு இலவச மருத்துவம், கல்வி, குடிநீர் வழங்கும் திட்டங்களை செயல்படுத்த இந்த அமைப்புகள் நிதி திரட்டவில்லை. ஆசைகளுக்கு உச்ச வரம்பு என்ற லட்சியத்தை பின்பற் றும் பக்தர்கள் மகிழ்ச்சியோடு அள் ளிக் கொடுக்கும் எதிர்பார்ப்பு இல்லாத நன்கொடைகளால் மட்டுமே இது சாத்தியமாகிறது.
நமது காலத்துக்கான ஒரு போதனை
பூமியில் காலநிலை மாற்றம் வேகம் பிடித்து, உலகளாவிய சமத்துவ மின்மை வேரூன்றும் வேளையில், தலைவர்களும் ஆர்வலர்களும் பல
தசாப்தங்களுக்கு முன்பு சத்ய சாய் பாபா கற்றுக் கொடுத்ததை எதிரொ லிக்க தொடங்கியுள்ளனர்: எளிமை யாக வாழ்வது இப்பூமியின் வளமான எதிர்காலத்துக்கான அடித்தளம். பாபாவின் நூற்றாண்டு விழா இந்த தத்துவத்தின் மீது இன்றைய தலைமு றைக்கும் புதிய ஆர்வத்தை துாண்டி யுள்ளது. நுகர்வு வாழ்க்கை முறைக்கு மாற்றாக நெறியான வாழ்வை தேடும் இளைஞர்கள் அவரது போதனை
1. உணவை வீணாக்காதீர்கள்
"உணவு கடவுள். அதை வீணாக் காதீர்கள். தேவையானதை மட்டும் சாப்பிடுங்கள்." அவ்வாறு செய்வது
நமக்கு உணவு கிடைக்க காரணமானவருக்கு நன்றி செலுத்த துாண்டும்; கவனமாக சாப்பிட உந்துதல் தரும்; உலகளாவிய
உணவு வீணாக்கலை குறைக்கும்.
2. பணத்தை வீணாக்காதீர்கள்
"பணம் வந்து போகிறது; ஒழுக்கம் வந்து வளர்கிறது."
எளிமையாக வாழ்வதையும், எஞ்சிய செல்வத்தை பிறருக்கு உதவி செய்ய பயன்படுத்துவதை யும் பாபா ஊக்குவித்தார்.
3. நேரத்தை வீணாக்காதீர்கள்
"நேர விரயம் வாழ்க்கை விரயம்." நேரத்தின் விலைமதிப்பற்ற தன் மையை வலியுறுத்தி, அதை ஆன்மிக வளர்ச்சிக்கும், மற்றவர் களுக்கு சேவை செய்யவும் பயன்படுத்த பாபா கற்றுக் கொடுத்தார்.
4. ஆற்றலை வீணாக்காதீர்கள்
உடல், மனம், புலன்களை
புனித நோக்கங்களுக்காக பயன்படுத்துங்கள்." நிலைத்தன்மை குறித்த உலகளாவிய
விவாதங்கள் பிரதான நீரோட்டமாக மாறுவதற்கு நீண்ட காலம் முன்பே பாபா இதை சொன்னார். தனிப்பட்ட
ஆற்றலுக்கும் இயற்கை வளங்களுக்கும் இது பொருந்தும். உலகெங்கிலும் உள்ள சாய் இளை ஞர் குழுக்கள் சுற்றுச்சூழல் விழிப் புணர்வு, பூஜ்ய கழிவு போன்ற பிரசாரங்கள் மூலமாகவும், சேவை திட்டங்கள் வழியாகவும், காலத்தால் அழியாத பாபாவின் போதனைக்கு புத்துயிர் கொடுக்கின்றன. குறைவான சாமான்கள், அதிகமான வசதி, மகிழ்ச் =சியான பயணம். பாபா சொன்னார்,
"ஆசைகளை குறைத்துக் கொள்ளுங் கள், மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இருப்பதை பகிர்ந்து கொள்ளுங்கள், தெய்வீகமாக மாறு வீர்கள்."
இந்த வார்த்தைகளில் பொதிந்துள்ள ஆழமான செய்தியை இனிமேலும் உலகம் உள்வாங்காமல் இருக்கவே முடியாது.