பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 100வது பிறந்தநாளை உலகம் கொண் டாடும் வேளையில், அவரது எளி மையான, ஆனால் ஆழ்ந்த பொருள் பொதிந்த "என் வாழ்க்கையே என் செய்தி" எனும் பிரகடனம் தலைமுறைகள் தாண்டி எதிரொலிக்கிறது. அது வெறும் அறிக்கை அல்ல. தன் னலமற்ற அன்பு, சேவை, சத்தியம் ஆகியவற்றில் வேரூன்றிய வாழ்க்கைக்கு உயிரோட்டம் கொண்ட சான்றாகும்.
ஆந்திர பிரதேசத்தின் புட்டபர்த்தி என்ற குக்கிராமத்தில் நவம்பர் 23, 1926 அன்று சத்தியநாராயண ராஜு என்ற பெயரில் பிறந்த சத்யா, சிறு வய திலிருந்தே ஆன்மிக ஞானம் மற்றும் கருணையின் அறிகுறிகளை வெளிப்படுத்தினார். "குரு ராஜு" என்று தான் கிராமத் தினர் அந்த வயதிலேயே அவரை மரியாதை கலந்த அன்புடன் அழைத்த னர். சிறு வயதிலேயே அவர், பஜனைகளை இயற்றினார், சச்சரவு களை தீர்த்து வைத்தார், தேவைப் பட்டவர்களுக்கு உதவி செய்தார், சோதனைகள் வந்தபோதும் பிரமிக்க வைக்கும் நிதானத்தை காட்டினார்.
1940ம் ஆண்டு, 14 வயதில், அவர் தனது தெய்வீக பணியை அறிவித்தார்: "நான் சாய்பாபா. மனித குலத்தை மேம்படுத்த வந்திருக்கிறேன்.
அன்றிலிருந்து, அவர் தனக்காக அல்ல, முற்றிலும் இந்த உலகத்துக் காகவே வாழ்ந்தார். அவர் ஒருமுறை சொன்னார்: "அன்பு இருக்கும் இடத்தில், வெறுப்புக்கு இடமில்லை. தன்னல மற்ற சேவை இருக்கும் இடத்தில், சுய நலத்துக்கு இடமில்லை.
அவரது வாழ்க்கை இந்த லட்சியங்க ளின் தொடர்ச்சியான வெளிப்பாடாகும்.
அன்பு நிறைந்த சேவை வாழ்க்கை
சத்ய சாய்பாபா ஒருபோதும் பணம், புகழ், பதவியை நாடியது இல்லை. யாரிடமும் அவற்றை கேட் டது இல்லை. "அனைவரையும் நேசியுங்கள், அனைவருக்கும் உதவி செய்யுங்கள்" என்பதை மட்டுமே கேட்டார். அத்தகைய வாழ்வின் மூலமாக அவ ரவர் உள்ளேயும் அனைத்து உயிரி னங்களிலும் தெய்வீகத்தை காணலாம் என்பதை அவர் மக்களுக்கு எடுத்து சொன்னார். "சேவை செய்யும் கைகள் பிரார்த்தனை செய்யும் உதடுகளை விட புனிதமானவை" என்று அவர் ஆணித்தரமாக சொல்லி வந்தார்.
அது வெறும் தத்துவம் அல்ல. செயல்பாடு என்பதை நிரூபித்தார். மகத் தான சேவை திட்டங்கள் மூலம் அவரது தத்துவம் நடைமுறைக்கு வந்தது: எளியோருக்கும் எந்த பாகுபாடும் இல்லாமல் உலக தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கும் மருத்துவ மனைகள். எண்ணற்ற நோயாளிகள் எந்த கட்டணமும் செலுத்த தேவை யில்லாமல் சிக்கலான அறுவை சிகிச் சைகளை செய்து கொள்கின்றனர். கருத்துகளை மூளைக்குள் வலிந்து திணிக்கும் வழக்கமான கல்வி முறை யில் இருந்து மாறுபட்டு, மனித மாண்புகளும் மதிப்புகளும் வேரூன் றும் விதமாக இதயத்தை பண்ப டுத்தும் வகையிலான முழுக்கல்வி திட்டத்தை வெற்றிகரமாக செயல்ப டுத்தும் பல்கலைக்கழகங்கள், அவரது கனவை நனவாக்கும் பட்டதாரிகளை உருவாக்குகின்றன. வறட்சி பாதித்த பகுதிகளில் கோடா னுகோடி மக்களின் தாகத்தை தணிக்கும் நீர் வினியோக திட்டங் கள் பாபாவின் புகழை பறைசாற்று கின்றன. உலகளாவிய சாய் சேவா அமைப் புகள், இப்போது 120 க்கு மேலான நாடுகளில் செயல்படுகின்றன. இந்த சேவைகள் எல்லாம் அபார மான நிறுவன கட்டமைப்பின் வலி மையினால் அல்ல, பாபாவின் எல் லையற்ற கருணை மற்றும் சளைக்காத முன்னுதாரணத்தின் விளைவாக நடை பெறுகின்றன.
பாபாவின் வார்த்தைகளில் அவரது போதனைகள்
பாபாவின் செய்திகள் எல்லாம் உரைகள் மூலமாக மட்டுமல்ல, அவ ரது தாய்மொழியான தெலுங்கில் கவிதை வரிகளாகவும் மக்களை சென்றடைந்தன. அவர் அடிக்கடி மேற்கோள் காட்டும் ஒரு வரி இது: "சிவுனி சன்னிதி லேகா, பக்தி பல மேதிதி?"அர்த்தம், "பக்தி உங்களை உங்க ளுக்குள் ஒளிந்திருக்கும் கடவுளின் சன்னதிக்கு அழைத்து செல்லவில்லை என்றால் அதனால் என்ன பயன்? பாபாவுடைய ஞானத்தின்
மற்றொரு மரகதம்: "சேவா மார்கமே பரமார்த்தம்" அதாவது, சேவையின் பாதையே இறைவனை அடையும் உயர்ந்த பாதை. இந்த எளிமையான மொழிகள் மூலம், அவர் மக்களை சடங்கிலிருந்து உணர்தலுக்கும், வடி வத்திலிருந்து சாரத்துக்கும் மெல்ல வழி நடத்தினார்.
செய்தி வாழ்ந்து கொண்டிருக்கிறது மனித குலத்துக்கு ஒரு செய்தியை விட்டுச் செல்லுமாறு கேட்டபோது, அவர் புன்னகையுடன் சொன்னார்:
"என் வாழ்க்கை தான் என் செய்தி."