நிர்வாக அறங்காவலர் ஆர். ஜே. ரத்னாகர் தலைமையிலான ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை, பசுவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பணி களை தொடர்ந்து செயல்படுத்துகிறது. உடல் நலம், சுகாதாரம், கல்வி, குடிநீர், வீட்டு தேவைகள், பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல், ஊட்டச்சத்து போன்ற புதிய துறைகளிலும் அது கவனம் செலுத்துகிறது. சென்ற 14 ஆண்டுகளில், ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக் கட்டளை புதிய முன்னெடுப்பு களை மேற்கொண்டுள்ளது.அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.
ஒடிசாவில் வெள்ளம் பாதித்த கிராமங்களில் 300 வீடுகளை கட்டியது. 2018 கேரளா வெள்ளத்திற்கு பிறகு, சேர்த்தலா, செட்டி குளங்கரா, தாமரக்குளம், செங்கனூர், மன்னார், புன்னப்ரா, கண்டல்லூர், மாராரிகுளம் ஆகிய இடங்களில் நர்சரி பள்ளிகளை புதுப்பித்தது. ஆலப்புழாவில் ஒன்பது அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டன. அனந்தபூர் மாவட்டத்தில் குடிநீர் வினியோக திட்டத்தை விரிவுபடுத்தியது. புட்டபர்த் தியை சுற்றியுள்ள கிராமங் களில் 52 ஆர்.ஓ ஆலைகளை நிறுவியது. ஸ்ரீ சத்ய சாய் NTR சுஜலா பதகத்தின் கீழ், கிராமங் களில் குடிநீர் வழங்க எட்டு நீர் சுத்திகரிப்பு ஆலைகள் அமைக் கப்பட்டன.ஒடிசாவின் கேந்திரபாதா மாவட்டத்தின் இரண்டு தொலை துார குக்கிராமங்களிலும், அதே மாநிலத்தில் உள்ள நுவாபாடா மாவட்டத்தில் ஐந்து ஆலைகளிலும் இரண்டு குடிநீர் ஆலை களை நிறுவியுள்ளது.
டாடிபத்ரியில் கிராமப்புற தொழிற்பயிற்சி மையத்திற்கான (RVTC) கட்டடம் கட்டுவதற் காக ரூ.50 லட்சம் நிதி அளித் தது. ரூ.5.6 கோடி செலவில் ஸ்ரீ சத்ய சாய் முழு கல்வி திட்டத்தை தொடங்கியது. மாற் றுத்திறனாளி குழந்தைகளுக்கு பயனளிக்கும் வகையில், 2020ம் ஆண்டு தேசிய கல்வி கொள்கையின் அடிப்படை யில், இந்திய அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இத்திட்டம் தொடங்கப்பட்டது. ஆந்திர பிரதேசத்தின் 26 மாவட்டங்களில் 44,392 பள் ளிகளில் 1 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் 38 லட்சம் மாணவர்களுக்கு காலையில் ராகி ஜாவா தயாரிக்க ராகி மாவு, வெல்லப் பொடி வழங் குகிறது. தொற்று பரவலால் பாதித்த புலம்பெயர் தொழிலா ளர்களுக்கு உணவளிக்க ரூ.1 கோடி நிதி அளித்தது. லடாக் கின் லேயில் உள்ள மகாபோதி கருணா மருத்துவமனையை மேம்படுத்த ரூ.2 கோடி செல விட்டுள்ளது. ஸ்ரீ சத்ய சாய் குளோபல் கவுன்சிலுடன் இணைந்து பக வானின் நூற்றாண்டு விழா பரிசாசு ஒரு கோடி மரங்களை நடுவதற்கான திட்டத்தை ஸ்ரீ சத்ய சாய் பிரேம தாரு என்ற பெயரில் தொடங்கியது.