மருத்துவம்: நவம்பர் 22, 1991: ஆந்திர பிரதேசத்தின் பிரசாந்திகிராமில் (புட்ட பர்த்தி) ஸ்ரீ சத்ய சாய் உயர் மருத் துவ அறிவியல் நிறுவனம் திறப்பு விழா. 220 படுக்கைகள் கொண்ட சூப்பர்ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனை. 10 மாதங்களில் 300 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. முழுக்க முழுக்க அனைவருக்கும் இலவச மருத்துவ சேவை வழங்குகிறது.
ஜனவரி 19, 2001: கர்நாடகாவின் ஒயிட்ஃபீல்டில் (பெங்களூரு) ஸ்ரீ சத்ய சாய் உயர் மருத்துவ அறிவி யல் நிறுவன திறப்பு விழா. இத யம் மற்றும் நரம்பியல் துறையில் அனைத்து விதமான உயர் சிகிச்சை களும் இலவசமாக வழங்குகிறது.
1992-1996: யூரோநெஃப்ராலஜிதுறையில் 47,396 வெளிநோயா ளிகள் பரிசோதிக்கப்பட்டனர். 5,652 சிக்கலான அறுவை சிகிச் சைகள், 4,286 சிறுநீரக டயாலி சிஸ், 71 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன.
1993: பிரசாந்திகிராம் மருத்து வமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை திட்டம் தொடக்கம்.
1994: மேம்பட்ட கண் பராம ரிப்பு வழங்குவதற்கான கண் மருத்துவ துறை தொடக்கம்.
1995: சிக்கலான கண் மற்றும் நரம்பியல் நோய்களை கண்டறி வதற்கான CT ஸ்கேனர் மற்றும் விட்ரியோ ரெட்டினல் சேவை கள் அறிமுகம்.
1999: மேம்பட்ட சிறுநீரக கல் சிகிச்சையை வழங்கும் லித் தோட்ரிப்சி மையம் தொடக்கம்.
குடிநீர்; ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை செயல்படுத்தியுள்ள பிரமாண்டமான குடிநீர் திட்டங்கள், அவற்றின் சிறப்புக்கும் தரத்துக்கும் உலக அளவில் பெரிதும் பாராட் டப்படுகின்றன. ஏராளமான நாடுகள் இத்திட்டங்களின் செயல் பாட்டை பின்பற்றுகின்றன. நீர் பற்றாக்குறை உள்ள மாவட் டங்களில் கோடிக்கணக்கான மக் களுக்கு சுத்தமான குடிநீர் வழங் குவதே இதன் பிரதான நோக்கம். ஆந்திர பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் 1995 ல் தொடங்கப் பட்டது இந்த திட்டம். மேடக், மகபூப்நகர், மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி மாவட்டங்களில் 700 கிராமங்களை உள்ளடக்கியது. 32 லட்சத்துக்கு மேலான மக்கள் இந்த திட்டங்க ளால் நேரடியாக பயன் அடைகிறார்கள். இதற்கான உள்கட்டமைப்பு உரு வாக்க பல்வேறு விட்டம் கொண்ட 2000 கி.மீ.க்கும் அதிகமான குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. 40,000 முதல் 300,000 லிட்டர் வரை கொள்ளளவு கொண்ட 268 மேல்நிலை சேவை நீர்த்தேக்கங் கள், 20,000 முதல் 60,000 லிட்டர் வரை கொள்ளளவு கொண்ட 125 தரைமட்ட சேவை நீர்த்தேக்கங்கள், 30 முதல் 100 ஏக்கர் வரை பரப் பளவு கொண்ட சேமிப்பு தொட்டி கள் அமைக்கப்பட்டன. மொத்த திட்டச் செலவு சுமார் 9.35 கோடி அமெரிக்க டாலர்கள். இது நன்கொடை மூலம் மட் டுமே திரட்டப்பட்டது. லார்சன் & டூப்ரோ நிறுவனம் ஆந்திர அரசு டன் இணைந்து கட்டுமான பணி களை செய்தது.
கல்வி: ஸ்ரீ சத்ய சாய் மிஷனின் கல்வி முயற்சிகள், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் தொடக்கநிலை முதல் முனைவர் பட்டம் வரை இலவசமாக தரமான கல்வி வழங்கி, சிறந்த பண்புகளை உரு வா